கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவு
இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவு From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவு அல்லது வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமப் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 31 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அச்சுவேலி, ஆவரங்கால், இடைக்காடு, இருபாலை, கல்வியங்காடு, கோப்பாய், நவக்கிரி, நீர்வேலி, பத்தமேனி, புத்தூர், சிறுப்பிட்டி, தம்பாலை, கதிரிப்பாய், ஊரெழு, உரும்பிராய், வளலாய், வாதரவத்தை ஆகிய ஊர்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இந்தியப் பெருங்கடல் இதன் வடக்கு எல்லையாக உள்ளது. மேற்கில் தெல்லிப்பழை, உடுவில், நல்லூர் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும், தெற்கில் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவும், கிழக்கில் சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவுடன் தொண்டைமானாறு நீரேரி, உப்பாறு நீரேரி என்பனவும் உள்ளன.
இதன் பரப்பளவு 102 சதுர கிலோமீட்டர் ஆகும்[1].
Remove ads
குறிப்புகள்
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads