வலிநீக்கி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வலிநீக்கி (analgesic) என்பது, உணர்விழப்பை ஏற்படுத்தாமல் வலி உணர்வைப் குறைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பல்வேறுவகையான மருந்து வகைகளுள் ஏதாவது ஒன்றைக் குறிக்கும். வலிநீக்கி மருந்துகள், புற நரம்பு மண்டலம் மற்றும் மைய நரம்பு மண்டலம் ஆகியவற்றில், பல்வேறு விதங்களில் செயற்படுகின்றன. இவற்றுள், பாராசித்தமோல், சலிசைலேட்டுகள் போன்ற அழற்சிக்கு எதிரான இயக்க ஊக்கிகள் இல்லாத மருந்துகள், மார்பைன், ட்ராமடோல் போன்ற போதையூட்டி இயல்புகள் கொண்ட செயற்கை மருந்துகள் என்பன அடங்கும். பொதுவாக வலிநீக்கிகளாகக் கருதப்படாத மூவளைய ஏக்கப்பகை மருந்துகள் (tricyclic antidepressants), மற்றும் வலிப்பு அடக்கிகள் (anticonvulsants) போன்ற மருந்துகளும், நரம்புநோய் நோய்குறித் தொகுப்பு (neuropathic pain syndromes) தொடர்பில் பயன்படுத்தப்படுகின்றன.

Remove ads
உசாத்துணைகள்
- ஹைபீம் கலைக்களஞ்சியம் (HighBeam Encyclopedia) (ஆங்கில மொழியில்)
- மெடிசின்நெட்.கொம் (MedicineNet.com) (ஆங்கில மொழியில்)
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads