மைய நரம்பு மண்டலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மைய நரம்பு மண்டலம் (Central nervous system - CNS), அல்லது மைய நரம்புத் தொகுதி, என்பது நரம்பு மண்டலத்தின் இரு பெரும் பிரிவுகளில் ஒன்றாகவும், மிகப்பெரிய பகுதியாகவும் இருப்பதுடன், தான் பெறும் தகவல்களை ஒன்றிணைத்து தொழிற்படும் ஆற்றல் கொண்டதாகவும் இருக்கின்றது. இது மூளை மற்றும் முண்ணாணை (தண்டுவடத்தை) உள்ளடக்கியது. விழித்திரையும் (retina), விழி நரம்பும் (optic nerve), முளைய விருத்தியின் போது மூளைவிருத்தி நிகழ்கையில், அங்கிருந்து உருவாகும் வெளிவளர்ச்சிகளாக இருப்பதனால், அவையும் மைய நரம்பு மண்டலப் பகுதியாகவே கொள்ளப்படுகின்றது[1]. இவை மட்டுமே நேரடியாப் பார்க்கக்கூடிய அமைப்புக்களாக உள்ளன. மைய நரம்பு மண்டலமானது, புற நரம்பு மண்டலத்தோடு (peripheral nervous system) இணைந்து உயிரினத்தின் நடத்தை, தொழிற்பாடுகளைக் கட்டுப்படுத்துகின்றது.
மையநரம்பு மண்டலம் எலும்புகளால் பாதுகாக்கப்படுகிறது. மூளை கபால எலும்புகளாலும், முண்ணாண் முதுகெலும்புகளாலும் பாதுகாக்கப்பட்டுள்ளன.

Remove ads
பரிணாமம்
பரிணாம வளர்ச்சியில் பிளனேரியா எனும் தட்டைப்புழுவில் தான் தெளிவாக வேறுபடுத்தி அறியக்கூடிய மைய நரம்பு மண்டலம் மற்றும் புற நரம்பு மண்டலம் எனும் வேறுபாடு காணப்படுகிறது.[2][3][4] பாலூட்டிகளில் மட்டுமே புதுமூளைப்புறணி காணப்படுகிறது.[5] பைப்பாலூட்டிகள், பிளாட்டிபசு போன்றவற்றில் பெரும்பாலான நஞ்சுக்கொடிப் பாலூட்டிகளின் மூளையில் காணப்படுவது போல் மேடு பள்ளங்கள் கிடையாது.[6] எலி நஞ்சுக்கொடிப் பாலூட்டியெனினும் அதன் சிறிய மூளையில் மேடு பள்ள மடிப்புகள் இல்லை. பூனையில் ஓரளவு மடிப்புகள் உண்டு. மனிதரிலோ அளவற்ற மடிப்புகள் உண்டு.[5]:198–199
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads