வல்சாடு மாவட்டம்

குசராத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

வல்சாடு மாவட்டம்map
Remove ads

வல்சாடு மாவட்டம் (Valsad district) இந்தியாவின், குசராத்து மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று. இது தெற்கு குசராத்தில் அமைந்துள்ளது. இதன் தலைமையிடம் வல்சாடு நகரம். வல்சாடு மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 5,244 சதுர கிலோ மீட்டர்கள்.

விரைவான உண்மைகள் வல்சாடு மாவட்டம் வல்சாத், வல்சத், வல்சட், நாடு ...
Thumb
15-8-2013-இல் புதிதாக துவக்கப்பட்ட 7 மாவட்டங்களுடன் குஜராத் மாநிலத்தின் புதிய வரைபடம்

இம்மாவட்டம் மாம்பழம், சப்போட்டா பழம், தேக்கு மரம் மற்றும் வேதியியல் தொழிற்சாலைகளுக்குப் பெயர் பெற்றது.

Remove ads

உட்பிரிவுகள்

இம்மாவட்டம் ஐந்து வட்டங்களைக் கொண்டுள்ளது.

  1. வல்சாடு வட்டம்
  2. பார்டி வட்டம்
  3. உமர்காம் வட்டம்
  4. கப்ராடா வட்டம்
  5. தரம்பூர் வட்டம்

அமைவிடம்

வடக்கே நவ்சாரி மாவட்டம், கிழக்கே நாசிக் மாவட்டம், மகாராஷ்டிர மாநிலம், தெற்கே பால்கர் மாவட்டம், மாகாராஷ்டிர மாநிலம், மேற்கே அரபுக் கடல் எல்லைகளாகக் கொண்டு அமைந்துள்ளது..[1]

பொருளாதாரம்

வேளாண்மை

மா, வாழை, கரும்பு, சுரைக்காய், நவதானியங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

தொழில்கள்

வேதியல் பொருட்கள், மருந்துகள், துணி மற்றும் நூல், காகித தொழிற்சாலைகள் அதிகம் கொண்டது. இம்மாவட்டம் தோட்டக்கலைக்கு மையமாக திகழ்கிறது. மேலும் சிறு, குறுந்தொழிற்சாலைகள் அதிகம் கொண்டது.

மக்கள் வகைப்பாடு

2011ஆம் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, வல்சாடு மாவட்ட மக்கட்தொகை 1,703,068 ஆகவும்,.[2][2] மக்களடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 561 நபர்கள் என்ற அளவிலும்,[2] பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 926 பெண்கள் என்ற அளவிலும், எழுத்தறிவு விகிதம் 80.94% ஆகவும் உள்ளது.,[2][2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads