வளிம இயக்கவியல்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வளிம இயக்கவியல் (Gas dynamics) என்பது பாய்ம இயக்கவியலின் ஒரு பிரிவாகும், இது வளிமங்களின் இயக்கம் மற்றும் இயற்பியல் தொகுதிகளோடு அவற்றின் தாக்கங்களைப் பற்றியப் படிப்பாகும். பாய்ம இயக்கவியல் மற்றும் வெப்ப இயக்கவியல் விதிகளின்படி, குறையொலி வேக மற்றும் மீயொலி வேக பறத்தல்களில் உண்டாகும் வளிம ஓட்டங்களைப் பற்றிய படிப்பினையே வளிம இயக்கவியலைக் கட்டமைக்கிறது. பாய்ம இயக்கவியலின் மற்ற பிரிவுகளிலிருந்து வேறுபடுத்துவதற்காக, பொருட்களின் வழியாகவோ அல்லது அவற்றைச் சுற்றியோ ஒலியின் விரைவு வேகத்தோடு ஒத்த அல்லது அதைவிட அதிகமான வேகத்தில் செல்லும் வளிம ஓட்டங்களைப் பற்றி வளிம இயக்கவியலில் விளக்கப்படுகிறது; இத்தகையப் பாய்வுகள் பாய்வுப்புலங்களில் வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. தாரை வானூர்திகளைச் சுற்றி ஏற்படும் அதிர்வலைகள், பீச்சுக்குழல் மற்றும் அடைப்பிதழ்களில் ஏற்படும் அடைவோட்டங்கள், வளிமண்டல மறுநுழைவு வாகனங்களில் ஏற்படும் காற்றியக்க வெப்பமேற்றம், தாரைப் பொறிகளில் வளிம எரிபொருட்பாய்வு போன்றவை வளிம இயக்கவியல் சார்ந்த படிப்புகளுக்கு சில எடுத்துக்காட்டுகளாகும். மூலக்கூறு அளவில் வளிம இயக்கவியலானது வளிமங்களின் இயக்கவியற்கொள்கையைப் பற்றிய படிப்பாகும், அது வளிமப்பரவல், புள்ளியியல் எந்திரவியல், வேதிவெப்ப இயக்கவியல், சமச்சீரற்ற வெப்ப இயக்கவியல் போன்றவற்றின் படிப்பினைகளுக்கு இட்டுச்செல்கிறது. வளிமப் புலம் காற்றாக இருக்கும்போது மற்றும் பறத்தல் சம்பந்தமான ஆய்வெனில் வளிம இயக்கவியல் காற்றியக்கவியல் எனப்படும். வானூர்தி, விண்கலம் மற்றும் அவற்றின் உந்துகைத் தொகுதிகளின் வடிவமைப்புகளுக்கு காற்றியக்கவியல் மிகப் பொருத்தமாக இருக்கும்.

Remove ads

சொல்பழக்க அறிமுகம்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads