வளைகுடா விமானம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வளைகுடா விமானம் (அரபி: طيران الخليج தயரான் அல் கலீஜ், ஆங்கிலம் : Gulf Air) என்பது பஹ்ரைன் நாட்டு அடையாள வான்வழி நிறுவனம். பஹ்ரைன் பன்னாட்டு விமான நிலையத்தை மையம் கொண்ட இவ்வான்வழி 45 இடங்களுக்கும் 28 நாடுகளுக்கும் பறக்கிறது.
Remove ads
குறியீடு ஒப்பந்தம்
இவ்வான்வழி இதர வான்வழி நிறுவங்களுடன் வான்வழி கூட்டு ஒப்பந்தம் (airline agreements) வைத்திருக்கப்படவில்லை என்றாலும் இந்தியாவின் ஜெட் வான்வழி மற்றும் ஓமான் விமானம் ஆகிய நிறுவங்களுடன் தொடர்பயணியர் திட்டங்களில் (frequent flier programs) குறியீடு ஒப்பந்தம் வைத்துள்ளது (code-share agreements).
வரலாறு
வளைகுடா பறப்பியல் (Gulf Aviation)
இந்நிறுவனம் 1945இல் தொடக்கிவைக்கப்பட்டது. 1940களில் தோஹாவிற்கும் பஹ்ரைனிற்கும் இடையே வாடகை விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிறுவனத்தை தொடக்கி வைத்த போஸ்வோர்த் என்பவர் "வளைகுடா பறப்பியல்" (Gulf Aviation) என்கிற பெயரில் நிறுவனத்தை பதிவு செய்தார்.
புதிய பறப்புக்கள்
பிறகு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் புதிய பறப்புக்கள் சேர்க்கப்பட்டது. இவர் ஒரு செயல் விளக்கப் பறப்பில் மரணம் அடைந்தார். 1951இல் பிரித்தானிய வெளிநாட்டு பறப்பியல் நிறுவனம் (British Overseas Aviation Corporation-BOAC) இந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது. 1978இல் கத்தார், பஹ்ரைன், ஓமான் ஆகிய அரசாங்கங்கள் இந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கின.
வணிகப்பெயர் மாற்றம்
பிறகு இந்நிறுவனத்திற்கு வணிகப்பெயர் மாற்றம் (re-branding) செய்யப்பட்டது. 1980களில் ரியாத், ஃபிரான்க்ஃபுர்ட், டமஸ்கஸ், இஸ்தான்புல் ஆகிய இடங்களுக்கு பறப்புக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads