வாட் சாய்வத்தாநரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வாட் சாய்வத்தாநரம் (Wat Chaiwatthanaram) தாய்லாந்து நாட்டின் கோயில் நகரமான அயூத்தியாவில் அமைந்த பௌத்த கோயில் தொகுதிகளில் ஒன்றாகும். புகழ் பெற்ற இக்கோயில், சாவோ பிரயா ஆற்றின் மேற்கு கரையில், ஆயூத்தயா தீவு நகரத்தின் வெளிப்புறத்தில் அமைந்துள்ளது. இது பன்னாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடிய பௌத்தக் கோயிலாகும். இக்கோயிலை உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனேஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.[1]

Remove ads
வரலாறு
தாய்லாந்து நாட்டு மன்னர் பிரசாத் தோங், தனது தாயின் நினைவாக இக்கோயிலை கி பி 1630இல் கட்டினார். கம்போடியாவின் கெமர் கட்டிடக்கலை பாணியில் வாட் சாய்வத்தாநரம் கோயில் கட்டப்பட்டது. 1767இல் தாய்லாந்து மீது படையெடுத்த பர்மியர்களால் இக்கோயில் சிதைக்கப்பட்டது. பின்னர் 1987இல் இக்கோயில் மறுசீரமைக்கப்பட்டு, 1992 முதல் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து விடப்பட்டது.
அமைப்பு
வாட் சாய்வத்தாநரம் கோயில் 35 மீட்டர் உயரம் கொண்ட கோபுரமும், அதனைச் சுற்றி நான்கு சிறு கோபுரங்களுடனும் கட்டப்பட்டது. முழுக் கட்டுமானமும் செவ்வக அமைப்பு கொண்ட மேடையில் அமையும் படி நிறுவப்பட்டுள்ளது. கோபுரத்தின் மீது ஏறிச் செல்வதற்கு மறைமுகமாக இடங்களில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
செவ்வக மேடையைச் சுற்றிலும் எட்டு தூபிகள் வடிவ வழிபாட்டு கூடங்கள் நிறுவப்பட்டுள்ளன. இக்கோயில் சுவர்களில் கருப்பு மற்றும் பொன் வண்ணத்தில் 120 புத்தர் சிலைகள் அமர்ந்த நிலையில் உள்ளன. கோயில் உட்புறச்சுவர்களில் புத்தரின் ஜாதகக் கதைகளின் காட்சிகள் ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது.
Remove ads
படக்காட்சிகள்
![]() |
![]() |
![]() |
![]() |
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads