வார்னர் மீடியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வார்னர் மீடியா, எல்எல்சி (ஆங்கிலம்: Warner Media, LLC) என்பது அமெரிக்க நாட்டு பன்னாட்டு மக்கள் ஊடகம் மற்றும் மகிழ்கலை குழும நிறுவனம் ஆகும். இது உலகின் நான்காவது சிறந்த பொழுதுபோக்கு மற்றும் உலகின் நான்காவது பெரிய ஊடக நிறுவனமாகும்.
இந்த நிறுவனம் முதலில் பெப்ரவரி 10, 1972 இல் இசுடீவ் ரோஸ் என்பவரால் வார்னர் கம்யூனிகேஷன்ஸ் என நிறுவப்பட்டது. பின்னர் டைம்-வார்னர் இன்க். (1990–2001), டைம் வார்னர் என்டர்டெயின்மெண்ட் கம்பெனி, எல்.பி. (1992–2001), ஏஓஎல் டைம் வார்னர் இன்க். (2001–2003) டைம் வார்னர் இன்க். (2003–2018) மற்றும் வார்னர் மீடியா (2019-2022) வரை வெவ்வேறு பெயர்களில் செய்யப்பட்டு ஏப்ரல் 8, 2022 அன்று தனது சேவையை முடித்துக்கொண்டது.
இந்த நிறுவனம் திரைப்படம், தொலைக்காட்சி, பதிப்பகம், இணையத்தள சேவை மற்றும் தொலைதொடர் செயல்பாடுகளை கொண்டுள்ளது, அதன் சொத்துக்கள் வார்னர்மீடியா ஸ்டுடியோஸ் & நெட்வொர்க்ஸ் டர்னர் ப்ராட்காஸ்டிங், எச்பிஓ மற்றும் சினிமாக்ஸ் மற்றும் வார்னர் புரோஸ். ஆகியவற்றின் பொழுதுபோக்கு சொத்துக்களை உள்ளடக்கியது. இதில் திரைப்படம், அனிமேஷன், தொலைக்காட்சி இஸ்டுடியோக்கள் உள்ளன. அத்துடன் யுனிவர்சல் பிக்சர்ஸ் ஹோம் என்டர்டெயின்மென்ட், டிசி காமிக்ஸ், நியூ லைன் சினிமா போன்ற திரைப்பட விநியோக நிறுவனங்களும் அடங்கும்.
டிஸ்கவரி இன்க். இன் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ஜாஸ்லாவின் கீழ் வார்னர் புரோஸ். டிஸ்கவரி என்ற புதிய பொது வர்த்தக நிறுவனத்தை உருவாக்க. இந்த ஒப்பந்தம் ஏப்ரல் 8, 2022 அன்று மூடப்பட்டது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads