வஸ்தோக் 1

From Wikipedia, the free encyclopedia

வஸ்தோக் 1
Remove ads

வஸ்தோக் 1 (Vostok 1, உருசியம்: Восток-1 என்பது உலகின் முதலாவது மனித விண்வெளிப்பறப்பு ஆகும். வஸ்தோக் என்னும் சொல் ரஷ்ய மொழியில் கிழக்கு என்னும் பொருள் கொண்டது. இவ்விண்கலம் வஸ்தோக் 3கேஏ என்னும் ஏவுகலம் மூலம் 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் நாள் விண்ணில் செலுத்தப்பட்டது. சோவியத் ஒன்றியத்தினால் ஏவப்பட்ட இவ் விண்கலம் யூரி ககாரின் என்ற முதல் விண்வெளிப்பயணியை ஏற்றிச் சென்றது. முதன் முதலாக ஒரு மனிதன் விண்வெளிக்குப் பயணித்ததும், சுற்றுப்பாதையுள் நுழைந்ததும் வஸ்தோக் 1 திட்டத்தின் மூலமே ஆகும். வஸ்தோக் 1, சோவியத் விண்வெளித் திட்டத்தைச் சேர்ந்த ஏவுகணை அறிவியலாளர்களான செர்கே கொரோல்யோவ், கெரிம் கெரிமோவ் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் திட்ட விபரம், திட்டப்பெயர்: ...
Remove ads

பயணம்

1961 ஏப்ரல் 12ல் விண்ணில் செலுத்தப்பட்ட வஸ்தோக் 1 விண்கலம் 27400 கிலோமீட்டர் வேகத்தில் சென்றது. கடல் மட்டத்திலிருந்து 327 கி.மீ. உயரத்தில் சென்று பூமியைச் சுற்றியது விண்கலத்தில் பயணம் செய்த யூரி சுகாரின் பூமியை ஒரு முறை வலம் வந்தார். பின்பு விண்கலத்தில் இருந்து வெளியேறி பாராசூட்டின் உதவியால் தரை இறங்கினார். இந்த விண்கலப் பயணம் 108 நிமிடத்தில் முடிந்தது. இந்த விண்கலப் பயணம் விண்வெளியில் மனிதன் உயிர்வாழ்தல் இயலும் என்று நிறுபித்தது.[1]

Remove ads

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads