வா மாநிலம் (மியான்மர்)

From Wikipedia, the free encyclopedia

வா மாநிலம் (மியான்மர்)
Remove ads

வா மாநிலம் (Wa State) மியான்மர் நாட்டின் கிழக்கில் அமைந்த ஒரு தன்னாட்சி நிர்வாகப் பிரிவாகும். [7][8]தன்னாட்சி பெற்ற வா மாநிலத்திற்கு தனி அரசியலமைப்பு, நாணயம், இராணுவம், அதிபர் மற்றும் நிர்வாகப் பிரிவுகள் கொண்டது.[9][10][11]

விரைவான உண்மைகள் வா மாநிலம்ဝပြည်နယ်, தலைநகரம் ...

துவக்கத்தில் வா மாநிலம் மியான்மர் நாட்டின் ஒரு மாநிலமாக இருந்தது. 1989ஆம் ஆண்டு முதல் வா மாநில ஆயுதக் குழுவினர் தன்னாட்சிக் கோரி மியான்மர் இராணுவத்துடன் போரிட்டு வென்று 17 ஏப்ரல் 1989 அன்று வா மாநிலம் தன்னாட்சி பெற்ற மாநிலமாக அறிவிக்கப்பட்டது. [12][13]

வா மாநிலம் வடக்கு, தெற்கு என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் தெற்கு பகுதி தாய்லாந்து எல்லைப்புறத்திலும், வடக்குப் பகுதி சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. மேலும்.வா மாநிலம் மூன்று கவுண்டிகளாகவும், இரண்டு சிறப்பு மாவட்டங்களாகவும் மற்றும் ஒரு பொருளாதார சிறப்பு மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் தலைநகர் பாங்காம் ஆகும். ஆசுத்ரோ-ஆசிய மொழி பேசும் வா மக்கள் இம்மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ளனர். இங்கு ஒரு கட்சி ஆட்சி முறை உள்ளது. இது ஏறத்தாழ சீனாவின் அரசியல் முறையைப் பின்பற்றுகிறது.

Remove ads

புவியியல் & பொருளாதாரம்

Thumb
வா மாநிலத்தின் வரைபடம்

[[File:Myanmar civil war.svg|thumb|right|220px|{{legend|#ed9595ff| மியான்மர் உள்நாட்டுப் போருக்கிடையில் மாநில அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள்]]

வா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் மலைப்பள்ளதாக்குகள் நிறைந்தது. இதன் குறைந்தபட்ச உயரம் 600 மீட்டர் ஆகும். துவக்கத்தில் அபினி செடி அதிகமாக பயிரிட்ட இம்மாநில மக்கள் [14]பின் சீனா உதவியுடன் இரப்பர் மரங்கள் மற்றும் தேயிலை பயிரிட்டனர்.[15] வா மாநிலத்தில் 220,000 ஏக்கர் பரப்பில் இரப்பர் தோட்டங்கள் உள்ளது. மேலும் நெல், மக்காச்சோளம், காய்கறிகள் பயிரிடப்படுகிறது. இம்மாநிலத்தில் தகரம்[16][17] மற்றும் துத்தநாகம் சுரங்கங்கள் மற்றும் குறைந்த அளவில் தங்க கனிமங்கள் உள்ளது.[18]கூடுதலாக தலைநகர் பாங்காம் நகரத்தில் சூதாட்டம், பாலியல் தொழில் சுற்றுலா செயல்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் ஐக்கிய வா மாநில அரசுப் படைகள் போதை மருந்து கடத்தல் அமைப்புகளில் ஒன்றாகும்.[19]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads