சின்லாந்து

From Wikipedia, the free encyclopedia

சின்லாந்து
Remove ads

சின்லாந்து (Chinland), அதிகாரப்பூர்மாக சின்லாந்து அரசு (State of Chinland), தென்கிழக்காசியாவில் உள்ள மியான்மர் நாட்டின் மேற்கே அமைந்த சின் மாநிலத்தின் மூன்றில் ஒரு பகுதிகளைக் கொண்டு சின்லாந்து தேசிய முன்னணியால் 13 ஏப்ரல் 2021 முதல் சின்லாந்து குழுவின் தன்னாட்சி முறையில் ஆட்சி செய்யும் பகுதியாகும். 6 டிசம்பர் 2023 முதல் சின்லாந்து சொந்த நாடாளுமன்றம் மற்றும் அரசியலமைப்பு கொண்டுள்ளது.[1][5]சின்லாந்தில் சின் மக்கள் மற்றும் மியான்மர் மிசோ மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் இம்மக்கள்.பர்மிய மொழி, குக்கி-சின் மொழிகள் மற்றும் ஆங்கிலம் பேசுகின்றனர். சின்லாந்திற்கு தெற்கில் ராகினி மாநிலம் மற்றும் வங்காளதேசம் மேற்கில் இந்தியாவின் மிசோரம் மற்றும் வடக்கில் மணிப்பூர் உள்ளது.

விரைவான உண்மைகள் சின்லாந்து தன்னாட்சி அரசுချင်းပြည် (Burmese), நிலை ...
Thumb
   மியான்மர் நாட்டின் மேற்கில் உள்ள சின் மாநிலத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் சின்லாந்து மற்றும் அதன் கூட்டு பகுதிகள்
Remove ads

வரலாறு

6 டிசம்பர் 2023 முதல் சின்லாந்து அரசு சொந்த அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தியது.[1]சின் மக்களுக்கு ஆதரவான இந்த அரசியலமைப்பை பிற எதிர்-கிளர்ச்சிக் குழுக்கள் மட்டும் ஏற்கவில்லை.[6] சின்லாந்து நாடாளுமன்றமான சின்லாந்து குழுவில் 27 சின்லாந்து தேசிய முன்னணியின் உறுப்பினர்களையும், 14 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மற்றும் 68 உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

நிர்வாகம்

சின்லாந்து அரசு நிர்வாகம், நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை என 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவுகளை சின்லாந்து குழு மேற்பார்வை செய்யும்.[1].[5]சின்லாந்து அரசியலமைப்புசின்லாந்து பாதுகாப்பு படைகளுக்கு ஆதரவாக சின்லாந்து தேசிய இராணுவம் செயல்படும். [5]

நிர்வாகப் பிரிவுகள்

சின்லாந்து நகர்புற உள்ளாட்சிகள் மற்றும் வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள்து.[7][8]

  • தாய்
  • ஃபாலம்
  • ஹக்கா
  • ஹுவால்ன்கோ
  • கன்பெட்டேட்
  • லௌலூ
  • மதுபி
  • மாரா
  • மின்தாத்
  • காவ்ன்
  • பலேத்வா
  • செந்தாங்
  • தாங்லாங்
  • சன்னியாத்
  • சோபெல்
  • சோலூங்
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads