விக்டர் யானுக்கோவிச்

From Wikipedia, the free encyclopedia

விக்டர் யானுக்கோவிச்
Remove ads

விக்டர் ஃபெதரோவிச் யானுக்கோவிச் (Viktor Fedorovych Yanukovych (உக்ரைனியம்: Ві́ктор Фе́дорович Януко́вич, கேட்க; உருசியம்: Виктор Фёдорович Янукович; பிறப்பு: 9 சூலை 1950) என்பவர் உக்ரைனிய அரசியல்வாதியும், உக்ரைனின் முன்னாள் அரசுத்தலைவரும் ஆவார். இவர் 2010 பெப்ரவரியில் அரசுத்தலைவராக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு ஆண்டுகளின் பின்னர் 2014 பெப்ரவரி 22 இல் உக்ரைனிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.[1] 2014 பெப்ரவரியில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் படுகொலைகளுக்கு உத்தரவிட்டமைக்காக இவர் மீது 2014 பெப்ரவரி 24 இல் கைதாணை பிறப்பிக்கப்பட்டது.[2]

விரைவான உண்மைகள் விக்டர் யானுக்கோவிச்Viktor YanukovychВіктор Янукович, உக்ரைனின் 4வது அரசுத்தலைவர் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads