கோயம்புத்தூர் நகர மண்டபம்
கோயம்புத்தூரின் நகர மண்டபம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோயம்புத்தூர் நகர மண்டபம் அல்லது டவுன்ஹால், கோயம்புத்தூர் (Victoria Town Hall, Coimbatore) என்பது, இந்தியாவின் கோயம்புத்தூரில் உள்ள ஒரு நியோ-பாரம்பரிய நகராட்சி கட்டிடம் ஆகும். ராணி விக்டோரியா, நினைவாக இந்த நகரமண்டபம் 1892 இல் கட்டப்பட்டது.[1] இதற்கு நகராட்சி மற்றும் பொதுமக்கள் நிதியளித்தனர். இந்த கட்டிடம் மாநகராட்சி கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் குடிமை வரவேற்புகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
Remove ads
கட்டுமானம்
கட்டுமான நிதி பல்வேறு மூலங்களிலிருந்து திரட்டப்பட்டது. 1887 இல், இக் கட்டிடத்திற்காக, சமூக ஆர்வலரும் பத்திரிகையாளருமான சே. ப. நரசிம்மலு நாயுடு ரூ. 1,000 ஐ, நன்கொடையாக அளித்தார்.[2] மேலும், பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டுவதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார். நகராட்சி நிறுவனம் ரூ. 3,000 ஐ நன்கொடையாக அளித்தது.[1]
1892 ஆம் ஆண்டில் ரூ. 10,000 செலவில், இக்கட்டிடத்தின் கட்டுமானப் பணி நிறைவடைந்தது.[3]
Remove ads
கட்டிடக்கலை
இந்த கட்டிடம் அரை ஏக்கரில் நியோ-பாரம்பரிய பாணியில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் 6000 சதுர அடி பரப்பளவு உள்ளது. கடினமான செந்நிறக் களிமண்ணால் செய்யப்பட்ட சிவப்பு மங்களூர் ஓடுகளைப் பயன்படுத்தி கூரை கட்டப்பட்டுள்ளது. இந்த கூரை பாணி பெரும்பாலான பிரித்தானிய அரச கட்டிடங்களை பொதுவாக ஒத்துள்ளது. ஓடுகள் வேயப்பட்ட கூரையை திடமான மரத்தாலான திரள்கட்டுகள் தாங்கி நிற்கின்றன.
வெள்ளை நிறத்தில் வண்ணம் பூசப்பட்ட இந்த கட்டிடத்தில் இரண்டு தளங்கள் உள்ளன. அதன் சுவர்கள் கல் மற்றும் சுண்ணாம்புச் சாந்து கொண்டு கட்டப்பட்டுள்ளது . கட்டிடத்தின் மூன்று பக்கங்களிலும் குறைந்த கூரைகளைக் கொண்ட தாழ்வாரங்கள் உள்ளன. தாழ்வாரங்களில் தசுக்கன் ஒழுங்கு பாணியில் குட்டையான நெடுவரிசைகளுடன் எல்லைகள் காணப்படுகின்றது. இங்குள்ள சன்னல்களில் மரச்சட்டத்துடன் கூடிய அடைப்புகளுடன் சாளரங்கள் உள்ளன.
நுழைவு மண்டபத்தின் முகப்பில் மூன்று கோதிக் வளைவுகள் உள்ளன. மேலும், தாழ்வாரத்தில் இந்த வளைவுகள் முதலிடம் வகிக்கிறது. தாழ்வாரத்தின் பக்கங்களிலும் ஒரு பெரிய வளைவு உள்ளது. 3000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட ஒரு மாமன்ற மண்டபத்திற்கு நடைவெளி வழிவகுக்கிறது. மெஸ்ஸானைன் தளம் என்று அழைக்கப்படும் இக்கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாம் தளத்திற்கு இடைப்பட்ட பகுதியானது, இங்கு நடைபெறும் கூட்டங்களுக்கான பார்வையாளர்களின் காட்சி கூடமாக இருக்கிறது.
Remove ads
வரலாறு
இந்த மண்டபம் பல ஆண்டுகளாக, மகாத்மா காந்தி மற்றும் சி. ராஜகோபாலாச்சாரி உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்களுக்கு வருகை தரும் குடிமை வரவேற்புகளை வழங்கின.[1]
1952 ஆம் ஆண்டில் டவுன்ஹால் கட்டிடத்தில் மாவட்ட மத்திய நூலகம் திறக்கப்பட்டது.[4] இந்த நூலமம், வ. உ. சி. பூங்காவில் உள்ள மற்றொரு கட்டிடத்திற்குச் செல்வதற்கு முன்பு, அதாவது, 1952ம் ஆண்டு முதல் 1956ம் ஆண்டு வரையிலான காலத்தில், இக் கட்டிடத்தின் முதல் தளம் மற்றும் இரண்டாம் தளத்திற்கு இடைப்பட்ட பகுதியில் இந்த நூலகம் செயல்பட்டது.
காலப்போக்கில் இந்த கட்டிடம் புறக்கணிக்கப்பட்டு பாழடைந்தது.
1992 இல் இக்கட்டிடத்தை இடிக்க அரசாங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.[1] ஆர்வலர்கள் மற்றும் இன்டாக் குழு ஒன்று சேர்ந்து இதை இடிக்காமல் இருப்பதற்கான ஆதரவைப் பெற்றது. பிரச்சாரம் இறுதியில் வெற்றிகரமாக முடிந்தது. மேலும், கட்டிடத்தை புதுப்பிக்க நிறுவனம் ஒப்புக்கொண்டது. இக் கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி, அதே ஆண்டில் ரூ .1,500,000 செலவில் செய்யப்பட்டது.
தற்போது, இந்த கட்டிடத்தில், கோயம்புத்தூர் மாநகராட்சியின் வழக்கமான கூட்டங்களை நடைபெறுகிறது.
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads