விசயவாடா வானூர்தி நிலையம்

From Wikipedia, the free encyclopedia

விசயவாடா வானூர்தி நிலையம்map
Remove ads

விசயவாடா வானூர்தி நிலையம் (Vijayawada Airport, (ஐஏடிஏ: VGA, ஐசிஏஓ: VOBZ) ஆந்திரப் பிரதேசத் தலைநகர் வலயத்திற்கான பொதுத்துறை பன்னாட்டு வானூர்தி நிலையம்.[2][3][4] இந்த வானூர்தி நிலையம் விசயவாடா நகரின் கன்னாவரம் பகுதியில் அமைந்துள்ளது. இந்த வானூர்தி நிலையத்தை அடுத்து சென்னையையும் கொல்கத்தாவையும் இணைக்கும் இந்திய தேசிய நெடுஞ்சாலை 16 செல்கிறது.

விரைவான உண்மைகள் விசயவாடா வானூர்தி நிலையம், சுருக்கமான விபரம் ...
Thumb
வானூர்தி நிலையத்திலுள்ள பெயர்ப்பலகை
Remove ads

வரலாறு

கன்னாவரத்தில் அமைந்திருந்த வான்களம் இரண்டாம் உலகப் போரின்போது படைத்துறையின் கீழ் இருந்தது; போர் முடிந்த பிறகு இது குடிசார் வானூர்தி நிலையமாக மாற்றப்பட்டது. இதனை ஏர் டெக்கான் வான்சேவை நிறுவனம் முதலில் பயன்படுத்தியது. செப்டம்பர் 2003ஆம் ஆண்டில் விசயவாடாவிற்கும் ஐதராபாத்திற்கும் இடையே தினசரி சேவை துவங்கியது.[5] 2011ஆம் ஆண்டு வரை இந்த வானூர்தி நிலையத்திலிருந்து நாளும் நான்கு பறப்புகளே இயக்கப்பட்டன; ஏர் டெக்கான் நிறுவனத்தை கையகப்படுத்திய கிங்க்ஃபிஷர் ஏர்லைன்ஸ் இவற்றை இயக்கியது.[6] 2011இல் தேசிய நிறுவனம் ஏர் இந்தியா, தனியார் வான்சேவை நிறுவனங்கள் ஸ்பைஸ் ஜெட், ஜெட் ஏர்வேஸ் இந்த வானூர்தி நிலையத்திற்கு நேரடி பறப்புகளை இயக்கின. வட்டார வான்சேவை நிறுவனமான ஏர் கோஸ்டா அக்டோபர் 2013இல் தனது இயக்கங்களைத் துவக்கியது. இந்த வான்சேவை நிறுவனத்தின் இயக்க மைய அச்சாக விசயவாடா விளங்கியது. ஆனால் ஏர் கோஸ்டா தனது இயக்கங்களை பெப்ரவரி 2017இல் நிறுத்திக் கொண்டது.இந்திய அரசு மே 5, 2017இல் இந்த வானூர்தி நிலையத்திற்கு பன்னாட்டுத் தகுதி அறிவித்தது; முறையாக குடியரசுத் தலைவரின் ஒப்புதல் ஆகத்து 1, 2017இல் பெறப்பபட்டது.[7]

Remove ads

கட்டமைப்பும் வசதிகளும்

Thumb
புதிய முனையத்தின் அகலப்பரப்புக் காட்சி

விசயவாடா வானூர்தி நிலையம் 537 ஏக்கர்கள் (217 ha) பரப்பளவில் அமைந்துள்ளது; இதன் ஓடுபாதை 2,286 மீட்டர்கள் (7,500 அடி) நீளமானது. இங்குள்ள 16 வானூர்தி நிறுத்தற்விடங்களில் ஐந்து ஏடிஆர் 72/பாம்பார்டியர் இக்யூ400 இரக அண்மைத்தொலைவு வானூர்திகளுக்கானவை; மற்றவற்றில் போயிங் 737/ஏர்பஸ் A320 இரக சேய்மைத் தொலைவு வானூர்திகள் நிறுத்தலாம்.

வளரும் பயணிகள் போக்குவரத்திற்கு சேவை புரியும் வண்ணம் புதிய முனையக் கட்டிடத்திற்கு அக்டோபர் 2015இல் அடிக்கல் நாட்டப்பட்டது.[8] இந்தப் புதிய முனையம் 14 மாதங்களில் முனைப்பாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. சனவரி 12, 2017இல் இது திறந்து வைக்கப்பட்டது.[9] 135 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த வளாகம் பன்னாட்டு முனையம் கட்டி முடிக்கும்வரை இடைப்பட்டக் கால முனையமாக விளங்கும்.

இந்த இடைப்பட்ட முனையமும் விழாகட்டும் ஓய்வறையும் 12, 999 சதுர மீட்டர்கள் பரப்பில் கட்டப்பட்டுள்ளன; உட்பதிகை முகப்புகள், வருகை கூடம், சந்திப்பும் வாழ்த்துகையும், சேவைகளுக்கான படிகள், வான்பயணியர் ஓய்வறை, பயணப்பெட்டி கோரல் பகுதிகள் ஆகியன அமைந்துள்ளன. இங்குள்ள ஓய்வறை 3,613 சதுர மீட்டர்கள். இந்த முனையம் எந்நேரமும் 500 பயணிகளை கையாளும் வண்ணம் 18 உள் பதிகை முகப்புக்களுடன் உள்ளது.[10] அண்மையில் பயணிகளின் வசதிக்காக தாங்களே உள்பதிகை செய்யும் தானியங்கி கருவிகளுடன் கூடிய 3 சேவைப்பெட்டிகளை அமைத்துள்ளது.

Remove ads

பன்னாட்டு சேவைகள்

ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தெலுங்கானா பிரிந்தபிறகு ஐதராபாத்து பன்னாட்டு வானூர்தி நிலையம் தெலுங்கானா மாநிலத்திற்கு சென்றது. ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகரான அமராவதி விசயவாடாவிற்கு அண்மையில் உள்ளதால் விசயவாடாவை பன்னாட்டு வானூர்தி நிலையமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. இதன்பிறகு விசயவாடா வானூர்தி நிலையத்தின் பயணிகள் போக்குவரத்து 72% கூடியுள்ளது.

விசயவாடாவிலிருந்து சவுதி அரேபியாவின் ஜெத்தாவிற்கு நேரடி வானூர்தி சேவைகள் துவங்க ஆந்திர அரசு நடுவண் அரசைக் கேட்டுள்ளது. இதுவரை ஹஜ் பயணிகள் ஐதராபாத்து வானூர்தி நிலையத்திலிருந்து சென்றனர். 2018 மே அல்லது சூலையில் இயக்கங்கள் துவங்கினால் இதுவே விசயவாடா வானூர்தி நிலையத்தின் பன்னாட்டு சேவைகளின் துவக்கமாக அமையும். [11]

வான்சேவை நிறுவனங்களும் சேரிடங்களும்

புள்ளிவிவரங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, பயணிகள் போக்குவரத்து ...

விபத்துக்களும் நிகழ்வுகளும்

  • ஆகத்து 28, 1980இல் ஹன்சு ஏர் நிறுவனத்தின் வைக்கர்சு வைகவுன்ட் கீழிறங்குகையில் வானூர்தியின் மூக்குச் சக்கரம் உடைந்து வானூர்தி மூன்று முறை மோதியெழுந்தது; இதனால் பொருளியல் சார்ந்த மீட்கவியலா நிலைக்கு சேதமடைந்தது.[16]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads