விசிட்டாத்துவைதம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

விசிட்டாத்துவைதம் (விசிஷ்டாத்வைதம்) என்பது காலத்தால் பழமைவாய்ந்து, பின்னர் வந்த வைணவ மகாச்சாரியராகிய இராமானுசரால் புகழ்பெற்ற தத்துவம் ஆகும். பிரம்ம சூத்திரம், பகவத் கீதை ,உபநிடதம் முதலியவற்றிற்கு தமது விசிட்டாத்துவைதக் கொள்கைப்படி உரை எழுதினார். சிறப்புநிலையான அத்வைதம் (இரண்டன்மைக் கொள்கை) என்பது இதன் பொருள் (விசிஷ்ட (சிறப்பு) + அத்வைதம் (இரண்டன்மை) = விசிஷ்டாத்வைதம்= விசிட்டாத்துவைதம்).

  • இறைவன் நம்மோடு இருக்கிறார் என்பது அத்துவைதம் (துவைதம் அற்ற நிலை), (இரண்டற்ற ஒருமை நிலை)
  • நமக்கு முன்னும் நமக்குப் பின்னும் இறைவன் இருப்பதால் இறைவன் வேறு, நாம் வேறு, மழை நமக்குள், நம்மால் இயங்குவது இல்லை, - என எண்ணி இறைவனையும், நம்மையும் இரண்டாகப் பார்ப்பது துவைதம்.
  • இந்த இரண்டு கோட்பாடுகளையும் ஒப்புக்கொள்வது விசிட்டாத்துவைதம். (செவ்விருமை)

வேதாத்திரி மகரிசி விளக்கம்

  • நமக்கு முன் உணவு (துவைதம்)
  • வயிற்றுக்குள் உணவு (விசிட்டாத்துவைதம்)
  • உணவு நம் உடலில் சத்தாக மாறிய நிலை (அத்துவைதம்)

விசிட்டாத்துவைதமானது சீவாத்மாவும் பரமாத்மாவும் ஒரே பொருளாலானவை என்றும் சீவாத்மா பரமாத்மாவிலிருந்து வெளிப்பட்டது என்றும் கூறுகிறது. சித்து, அசித்துச் சேர்க்கையால் விளங்கும் இரண்டற்றதான பிரம்மம் உண்டென்பதே உட்கருத்து. பிரம்மம் ஒருவரே. அவர் சத்து என்றும் பிரம்மம் என்றும் ஈசுவரன் என்றும் திருமால் என்றும் பெயர் பெறுகிறார். அவர் சித்து என்னும் ஆத்மாவுடனும் அசித்து எனப்படும் சடத்தோடும் எப்போதும் சேர்ந்திருக்கிறார். பரமாத்மாவே நிலையானவர். சுதந்திரம் உடையவர் சித்தும் அசித்தும் அவரைச் சார்ந்திருப்பவை. ஆசாரிய அன்பு, சுருதி, சுமிருதி, நம்பிக்கை, மோட்ச விருப்பம், உலக ஆசை அறுதல், தரும சிந்தனை, வேத பாராயணம், சாது சங்கமச் சேர்க்கை முதலானவற்றால் கர்மபந்தத்தை விட்டு முக்தி பெறலாம்.[1][2][3]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads