விசையுந்து

From Wikipedia, the free encyclopedia

விசையுந்து
Remove ads

விசையுந்து இலங்கை வழக்கு உந்துருளி (மேலும் மோட்டார்பைக், பைக், அல்லது இருசக்கர வண்டி என்றும் அழைக்கப்படுகிறது) என்பது ஒரு ஒற்றை தட, இரு சக்கர இயக்க வாகனம் ஆகும். விசையுந்து அவை வடிவமைக்கப்பட்ட வேலையை பொறுத்து கணிசமாக வேறுபடும்.[1][2][3]

Thumb
1954 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஒரு வகை விசையுந்து
Thumb
பிரஞ்சு காவல் துறையின் விசையுந்து

விசையுந்து, மோட்டார் இணைக்கப்பட்ட போக்குவரத்து வாகனங்களிலேயே மிகவும் விலை மலிவானதாக பல்வேறு நாடுகளில் கிடைக்கின்றன. விசையுந்து உலகில் மக்களால் அதிகம் வாங்கபெறும் மற்றும் பயன்படுத்தப்படும் இயக்க வாகனமாகும். உலகில் தோராயமாக 200 மில்லியன் (20 கோடி) விசையுந்துகள் உள்ளது. அதாவது ஆயிரம் மக்களுக்கு 33 விசையுந்துகள் உள்ளது. அதே வேளையில் உலகில் 59 கோடி நான்கு சக்கர வாகனங்கள் உள்ளது. அதாவது ஆயிரம் மக்களுக்கு 91 நான்கு சக்கர வாகனங்கள் உள்ளது. பெரும்பாலான விசையுந்துகள் (58%) கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளிலும் ஜப்பான் நீங்கலான ஆசியா பசிபிக் நாடுகளிலும் உள்ளது. அதே வேளையில் 33% நான்கு சக்கர வாகனங்கள் அமெரிக்க மற்றும் ஜப்பானில் உள்ளது.2006 ஆம் ஆண்டின் கணக்கின்படி சீனாவில் 5.4 கோடி விசையுந்துகள் உள்ளது. சீனா ௨.௨ கோடி விசையுந்துகளை உற்பத்தி செய்கிறது.

Remove ads

வரலாறு

முதல் உள் எரி பொறியல் இயங்கும் பெட்ரோல் விசையுந்து, ஜெர்மன் அறிவியல் கண்டுபிடிப்பளர்கள் காட்‌லீப் டேம்‌லர் மற்றும் வில்‌ஹெல்ம் மாய்பச் ஆகியோரால் 1885 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.அதன் பெயர் பெர்ட்ரோலியம் ரேடுவேகேன் அல்லது டேம்‌லர் ரேடுவேகேன்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads