தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு
பிராந்திய அரசுகளுக்கிடையேயான மற்றும் புவிசார் அரசியல் அமைப்பு From Wikipedia, the free encyclopedia
Remove ads
தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லது சார்க் (South Asian Association for Regional Cooperation, SAARC) என்பது தெற்காசிய நாடுகளுக்கிடையேயான நல்லுறவு, பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் முகமாக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு ஆகும். தெற்காசியாவின் 8 நாடுகள் இவ்வமைப்பில் முழுமையான அங்கத்துவ நாடுகளாக உள்ளன. இவ்வமைப்பு டிசம்பர் 8, 1985 ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது. ஏப்ரல் 2007 இல் இடம்பெற்ற இவ்வமைப்பின் 14வது உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் இதன் 8வது உறுப்பு நாடாக சேர்த்துக்கொள்ளப்பட்டது.
Remove ads
உறுப்பு நாடுகள்
தற்போதைய உறுப்பினர்கள் |
பார்வையாளர்கள் |
Remove ads
எதிர்கால உறுப்பு நாடுகள்
மக்கள் சீனக் குடியரசு சார்க்கில் இணையும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது[3]. பாகிஸ்தானும் வங்காளதேசமும் இதற்கு ஆதரவளித்தாலும் இந்தியா இன்னமும் தனது ஆதரவை வெளிப்படுத்தவில்லை. பூட்டான் சீனாவுடன் இதுவரை தூதரக உறவைப் பேணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது[4].
ஈரான் வெளிநாட்டமைச்சர் கமால் கராசி பெப்ரவரி 22 2005 இல் சார்க்கில் ஈரான் இணையும் விருப்பத்தை தெரிவித்தார்[5].
ரஷ்யா இவ்வமைப்பில் பார்வையாளராக இருக்க விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தியா இதற்கு ஆதரவளித்துள்ளது[6][7]
மியான்மார் பார்வையாளராக விருப்பம் தெரிவித்துள்ளது[6]
ஆஸ்திரேலியாவும் மொரீசியஸ் உடன் சேர்ந்து பார்வையாளராக இருக்க விருப்பம் தெரிவித்துள்ளது[8]
தென்னாபிரிக்கா கூட்டங்களில் பங்கு பெற்றியிருக்கிறது[10]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads