விஜய குமாரணதுங்க
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விஜய குமாரணதுங்க [1] (அக்டோபர் 9, 1945 - பெப்ரவரி 16, 1988, இலங்கையின் பிரபல சிங்கள திரைப்பட நடிகரும் அரசியல்வாதியும் ஆவார். இவர் முன்னாள் இலங்கை அரசுத் தலைவர் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கவின் கணவராவார். 1988 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார்.
Remove ads
திரையுலகில்
குமாரதுங்கவின் முதல் திரைப்படம் ஹந்தான கதாவ (Hanthane Kathawa) என்பதாகும். அன்றிலிருந்த அவர் இறக்கும் வரையில் மொத்தம் 114 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 1983 முதல் 1988 வரையில் அவர் இலங்கையின் மிகப் பிரபலமான நடிகர் என்ற விருதினைப் பெற்றவர். The God King என்ற ஆங்கிலத் திரைப்படத்திலும் நங்கூரம் என்ற தமிழ்த் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
அரசியலில்
சினிமாவில் நடித்துக் கொண்டே அரசியலிலும் ஈடுபட்டார் விஜய. ஆரம்பத்தில் லங்கா சமசமாஜக் கட்சியில் இணைந்து செயலாற்றிய குமாரதுங்க பின்னர் 1974 இல் இலங்கை சுதந்திரக் கட்சியில் சேர்ந்தார். 1982 ஆம் ஆண்டில் அரசுத் தலைவர் தேர்தலில் சுதந்திரக் கட்சிக்காகப் போட்டியிட்ட ஹெக்டர் கொப்பேக்கடுவவை ஆதரித்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தலின் பின்னர் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் அரசு குமாரதுங்கவை நக்சலைட் எனக் குற்றங்சாட்டி சிறையில் அடைத்தது.
Remove ads
புதிய கட்சி ஆரம்பித்தல்
சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாக 1984 இல் இலங்கை மக்கள் கட்சியை (Sri Lanka Mahajana Party) ஆரம்பித்தார். இலங்கை மக்கள் கட்சி, சமூக ஜனநாயகவாத மார்க்கத்தில் பயணித்ததுடன் இலங்கையில் இனப் பிரச்சினை பல வழிகளிலும் ஏற்பட்ட காலத்தில் இன, குல, மத பேதங்களை புறந்தள்ளி நாட்டின் சகல இன மக்களையும் ஒரேயொரு அரசியல் சக்திக்குள் கொண்டு செலுத்த அரும்பாடுபட்டார் விஜய குமாரதுங்க.
இனப்பிரச்சினையில் குமாரதுங்கவின் நிலைப்பாடு
விஜய குமாரதுங்க 1985/86 காலப் பகுதிகளிலேயே இலங்கை இனப் பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வே ஒரேயொரு இறுதித் தீர்வென அச்சமின்றி சுட்டிக்காட்டியிருந்தார்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் விஜய குமாரதுங்க 1986 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மற்றும் சென்னை சுற்றுப் பயணம் மேற்கொண்டு வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் அரசியல் இணைப்பை ஏற்படுத்த முன்வந்து செயற்பட்டார். யாழ்ப்பாணம் சென்ற விஜய குமாரதுங்க உட்பட்ட குழுவினரை அங்குள்ள சாதாரண மக்கள் வரவேற்ற முறையிலிருந்தே அவர் மீது, வட பகுதி மக்கள் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கை வெளிப்பட்டது. இதேநேரம் சென்னைக்கும் சென்ற விஜய குமாரதுங்கவை சந்திக்கவென அப்போது, தமிழ் நாட்டில் தங்கியிருந்த வடக்கின் சகல போராட்டத் தலைவர்களும் வந்திருந்தனர்.
யாழ்ப்பாணம் சென்ற விஜய குமாரதுங்கவிற்கு அப்போது விடுதலைப் புலிகளின் பொறுப்பிலிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றையும் விடுதலை செய்ய முடிந்தது.
விஜய குமாரதுங்க விஞ்ஞானமய சோசலிசத்தில் லெனினால் சுட்டிக்காட்டப்பட்ட, இனங்களின் சுயாட்சி உரிமையை ஏற்றுக் கொண்டு இனப் பிரச்சினை சமூக ஜனநாயகவாத சமூக முறையொன்றுக்குள் அமைதியாக தீர்க்கப்பட வேண்டும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் இருந்தார். அதற்கமைய அன்றைய இடதுசாரித் தலைவர்களான கொல்வின் ஆர். டி சில்வா, பீட்டர் கெனமன், வாசுதேவ நாணயக்கார போன்றவர்களைத் தனது அரசியல் மார்க்கத்திற்குள் இணைத்துக் கொள்ள அவரால் முடிந்திருந்தது.
Remove ads
மறைவு
பெப்ரவர் 16, 1988 இல் அவரது பொல்ஹேன்கொடவில் உள்ள அவரது வீட்டுக்கு வெளியே உந்துருளியில் வந்த இருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்தார். வழக்கு விசாரணையின் போது டார்சன் வீர்ரசிங்கே மற்றும் லயனல் ரணசிங்கே என்ற இருவருமே கொலையை செய்ததாக தீர்ப்பளிக்கப்பட்டது. இவர்கள் வழக்கு முடிவுக்கு முன்னரே இறந்துவிட்டனர். மேலும் வீரரத்னே முட்தியன்சேலாகே தனபால என்ற சிங்களவரும் துறைசாமி கந்தன் என்ற தமிழரும் கொலையாளர்களுக்கு உதவினார்கள் என தண்டனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள்.[2] கொலையின் நோக்கம் இன்னமும் மர்மமாகவே உள்ளது.
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads