இலங்கை மக்கள் கட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலங்கை மக்கள் கட்சி (Sri Lanka Mahajana Pakshaya, Sri Lanka People's Party) என்பது இலங்கையின் ஓர் அரசியல் கட்சி ஆகும். இது 1984 ஆம் ஆண்டில் அரசியல்வாதியும், நடிகருமான விஜய குமாரணதுங்கவினால் ஆரம்பிக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டில் அவர் சுட்டுக் கொல்லப்படும் வரை அதன் தலைவராக இருந்து செயல்பட்டார். அவரது இறப்பின் பின்னர் அவரது மனைவி சந்திரிக்கா குமாரதுங்க இக்கட்சியின் தலைவராக சிறிது காலம் பணியாற்றினார். அதன் பின்னர் ஒசி அபேகுணசேகரா தலைவராகச் செயல்பட்டார். இவரும் 1994 ஆம் ஆண்டில் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். 1988-1989 காலப்பகுதியில் இடம்பெற்ற சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சியின் போது இக்கட்சியின் 114 உறுப்பினர்கள் உயிரிழந்தனர். ஒசி அபேகுணசேகரா 1988 அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு 235,719 (4.63%) வாக்குகளைப் பெற்றார்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இலங்கை நாடாளுமன்றத்துக்கான 2004 தேர்தலில் இக்கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டது.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads