விஜேந்திரசுவாமி மடம், கும்பகோணம்

From Wikipedia, the free encyclopedia

விஜேந்திரசுவாமி மடம், கும்பகோணம்
Remove ads

விசேந்திரசுவாமி மடம் கும்பகோணத்தில் உள்ள மடமாகும்.

Thumb
விசேந்திரசுவாமி மட நுழைவாயில்
Thumb
விசேந்திரசுவாமி மடம்

அமைவிடம்

விசேந்திர சுவாமி மடம் எனப்படும் இம்மடம் சோலையப்பன் தெருவில் விசேந்திர சுவாமி படித்துறைச் சந்திற்கு அடுத்தபடியாக அமைந்துள்ளது.

சமாதி

மடத்தின் நடுவில் விசேந்திரர் சுவாமியின் மூல பிருந்தாவனம் அமைந்துள்ளது. சற்றொப்ப இதே வடிவில்தான் மந்த்ராலயம் என்னுமிடத்தில் ராகவேந்திரர் சுவாமியின் மூல பிருந்தாவனம் காணப்படுகிறது.மடத்தில் மத்வாச்சாரியார், லட்சுமி நாராயணர், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு வரிசையாக தனித்தனியாக சன்னதிகள் அமைந்துள்ளன.

பிற மடங்கள்

கும்பகோணத்தில் உள்ள பிற மடங்கள் சங்கர மடம், வீர சைவ மடம் மற்றும் மௌனசுவாமி மடம் ஆகியவையாகும். இட்டகா மடம் இருந்ததற்கான சான்று தற்போது கும்பகோணத்தில் எங்கும் காணப்பெறவில்லை.

மிருத்திகா பிருந்தாவனம்

பிருந்தாவன மடம் என்று சொல்லப்படுகின்ற இந்த மடத்தில் ராகவேந்திர சுவாமிகள் தங்கி, குருவிடம் வேதாப்யாசம் பெற்று ஞானதீப சுடரொளியாக வீசுகின்றார். [1]அவர் அருள்பாலித்துவரும் ராகவேந்திர சுவாமிகளின் மிருத்திகா பிருந்தாவனத்தின் கும்பாபிசேகம் சூன் 12, 2015 அன்று நடைபெற்றது. [2]

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads