திருவிடைவாசல் புண்ணியகோடியப்பர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
புண்ணியகோடியப்பர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஒரு சிவத்தலமாகும். திருஞான சம்பந்தரின் காலத்திற்கு முன்பே இத்தலம் திருவிடைவாசல் என்றழைக்கப்பட்டுள்ளது. இத்தலம் விடையன் என்ற சூரிய குலத்து அரசர் கட்டி வழிபட்ட தலமாதலால் திருவிடைவாசல் என்றழைக்கப்பட்டது.
Remove ads
அமைவிடம்
கொரடாச்சேரியிலிருந்து கூத்தாநல்லூர் செல்லும் பாதையில் வெண்ணாற்றுப் பாலத்திற்கு அருகில் திருவிடைவாயில் வழிகாட்டி உள்ளது. அவ்வழியில் 2 கி.மீ. சென்றால் திருஇடைவாய் (திருவிடைவாய்)என்று அழைக்கப்படும் இத்தலத்தை அடையலாம்.[3]
இறைவன், இறைவி
இத்தலத்தின் இறைவன் புண்ணியகோடியப்பர், இறைவி அபிராமி. இத்தலத்தின் தலவிருட்சமாக கஸ்தூரி அரளி மரமும், தீர்த்தமாக ஸ்ரீ தீர்த்தமும் உள்ளன.
சிறப்புகள்
இத்தலத்திற்கான தேவாரப் பாடல்கள் கிபி 1917ல் கண்டுபிடிக்கப்பட்டன. தேவாரப்பாடல் பெற்ற தலங்களின் எண்ணிக்கை 274 என்று பொதுவாக அறியப்பட்டாலும், திருவிடைவாய் திருத்தலத்திற்காக திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் 1917 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் எண்ணிக்கை 275 ஆனது.
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads