விண்டோசு மில்லேனியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விண்டோஸ் மில்லேனியம் 16/32பிட் கலப்பு வரைகலை இடைமுகமுடைய ஒர் இயங்குதளமாகும். இது செப்டெம்பர் 14, 2000 வெளியிடப்பட்டது.
Remove ads
மேலோட்டம்
விண்டோஸ் 95, விண்டோஸ் 98 வழிவந்த விண்டோஸ் 2000 ஒப்பிடுகையில் வீட்டுப் பயன்பாட்டுக்காக உருவாக்கப் பட்ட ஓர் இயங்குதளமாகும். நிறுவனப் பயன்பாட்டுக்கான விண்டோஸ் 2000 இதற்கு 7 மாதங்கள் முன்னரே வெளியிடப்பட்டது. இது மைக்ரோசாப்ட் இண்டநெட் எக்ஸ்புளோளர் 5.5, விண்டோஸ் மீடியாபிளேயர் 7.0 மற்றும் அடிப்படையான நிகழ்படங்களை (வீடியோ) உருவாக்கி மாற்றங்களை உண்டுபண்ணக்கூடிய விண்டோஸ் மூவிமேக்கர் மென்பொருட்களை உள்ளடக்கியிருந்தது. இதில் இண்டநெட் எக்ஸ்புளோளர் 5.5 மற்றும் விண்டோஸ் மீடியாப் பிளேயர் பழைய விண்டோஸ் இயங்கு தளங்களிலும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தக்கூடியவை. விண்டோஸ் XP ஹோம் பதிப்புப் போன்று, இது விண்டோஸ் NT வழிவந்த அலுவலங்களை இலக்காகக் கொண்ட இயங்குதளம் அன்று; மாறாக இது மைக்ரோசாப்ட் டாஸ் வழிவந்த ஓர் இயங்குதளமாகும்.
விண்டோஸ் மில்லேனியமே குறுகிய வாழ்நாள் உள்ள விண்டோஸ் இயங்குதளமாகும். மாறாக விண்டோஸ் XP மிக நீண்ட ஆயுட்காலமுள்ள இயங்குதளமாகும் விண்டோஸ் XP அக்டோபர் 25, 2001 வெளிவந்தது. விண்டோஸ் எக்சுப்பிக்கு அடுத்து வெளிவந்த விண்டோஸ் விஸ்டா 2007, சனவரி 30 அன்று வெளியானது.
2006 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிசிவேல்டு (ஆங்கிலம்:PCWorld) இதழ் மிகமோசமான தொழில் நுட்டப் மென்பொருட்களுள் இதை நான்காவதாக விண்டோஸ் மில்லேனியம் பதிப்பை இதிலுள்ள தொழில் நுட்பச் சிக்கல்களினால் தெரிவுசெய்தது. (முதல் மூன்று இடங்களைப் பிடித்தவை முறையே அமெரிக்கா ஆன்லைன், ரியல்பிளேயர், சின்கரனஸ் சாப்ட் ராம்.)
Remove ads
புதிதாக மேம்படுத்தப்பட்ட வசதிகள்
- கணினியை மீட்டெடுத்தல்
- கணினியை மீண்டும் பழைய நிலைக்கு மீட்டெடுக்கும் வசதி இவ்வியங்கு தளத்திலேயே மைக்ரோசாப்ட் அறிமுகம் செய்தது. இதிலிருந்து பெற்ற அனுபவங்களை விண்டோஸ் எக்ஸ்பியில்லும் பாவித்தது. கணினியை மீட்டெடுக்கும் செயற்பாட்டினால் கணினியானது மெதுவாக இயங்கும் வாய்ப்புள்ளது தவிர கணினியில் உள்ள வைரஸ்களும் மீட்டெடுக்கப்படும் அபாயம் உள்ளது. எனினும், எக்ஸ்.பியில் வேலை செய்தது போல் அல்லாது, இந்த வசதி மில்லேனியத்தில் சரியாக வேலை செய்யவில்லை எனப் பரவலாக கூறப்பட்டது.
- எதை இணைத்தாலும் உடனியங்கும் வசதி
- மைக்ரோசாப்ட் விண்டோஸ் மில்லேனியம் இயங்குதளமே முதலாவதாக கணினியில் இணைத்தவுடனேயே இயங்கும் வசதியினை அறிமுகம் செய்தது.
- தானாகவே இயங்குதளத்தை மேம்படுத்தல்
- தானாகவே இயங்குதளத்தை மேம்படுத்தும் வசதியில் இயங்குதள மேம்பாடுகளையும் மிக முக்கியமான பிரச்சினைகளைத் தீர்க்கும் மென்பொருள் மேம்பாடுகளையும் தானாகவோ, பயனரின் இடையூறின்றியோ சிறிதளவு பயனரின் தலையீட்டுடனோ நிறுவக்கூடியது. இது பொதுவாக 24 மணிக்கு ஒருதடவை விண்டோஸ் மேம்படுத்தற் பக்கத்தில் மேம்பாடுகள் உள்ளனவா எனப் பார்வையிட்டு இதனைச் செயல்படுத்துகிறது.
- கணினி இயங்குதளக் கோப்பைப் பாதுக்காத்தல்
- விண்டோஸ் 2000 இல் அறிமுகம் செய்யப்பட்ட விண்டோஸ் கோப்புப் பாதுகாப்பும், விண்டோஸ் 98-இலுள்ள கணினி இயங்குதள கோப்பை ஆராயும் வசதியும் மேம்படுத்திய இவ்வசதியானது அமைதியாக இயங்குதளத்திற்குத் தேவையான கோப்புக்களை மாற்றமடையாமல் பாதுகாத்து அப்படியேதும் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அதன் முன்னைய கோப்பிலிருந்து தானாக மீட்டுவிடும்.
Remove ads
குறைகூறும் கருத்துக்கள்
பல பயனர்கள் விண்டொஸ் மில்லேனியத்தைக் குறைகூறுவதற்கு வன்பொருட்களுக்கான ஒத்திசைவின்மையும் இயங்குதளம் நேர்த்தியாக இயங்காமையும், இயங்குதளம் உறைதலும், தொடங்கும் போதும் நிறுத்தும் போதும் உள்ள பிரச்சினைகளும் காரணமாக அமைந்தன. ஒத்திசைவின்மை வன்பொருட் தயாரிப்பாளர்கள் விண்டோஸ் 95, 98 இற்குத் தயாரித்த டிரைவர் மென்பொருட்களை சரிப்பார்க்காமலே மில்லேனியத்தில் பயன்படுத்தியதால் ஏற்பட்டது. பெரும்பாலான வேளைகளில் விண்டோஸ் மில்லேனியம் சரிவர இயங்குவதற்கு கணினியின் BIOS மேம்படுத்தல்கள் தேவைப்பட்டது.
- சில கணினி வன்பொருட்களுடன் ஒத்திசைவுப் பிரச்சினை
- சாப்ட்மோடம் (மென்பொருள் மோடம்) போன்ற மலிவாகக் கிடைக்கும் மோடம் பெரும்பாலானவை சரியாக இயங்காமை
- இணைத்தவுடன் இயங்கும் ஆதரவில்லாத பாகங்களுக்கான ஆதரவை மைக்ரோசாப்ட் விலக்கியதால் குழப்பங்கள் நிலவியது. குறிப்பாகப் பழைய ஒலியட்டை(சவுண்ட்காட்), வலையட்டை(நெட்வேக்காட்) சரிவர இயங்கவில்லை.
இவை எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து விண்டோஸ் மில்லேனியத்தை ஓர் குழப்பமான இயங்குதளமாகத் தீர்மானித்தது.
இவ்வாறாகப் பலகுழப்பங்கள் நிலவியதால் விண்டோஸ் மில்லேனியத்தில் வரும் "ME" எழுத்துக்களைப் பலரும் கிண்டலாக மைக்ரோசாப்ட் சோதனை (Microsoft Experiment), தவறுதலான பதிப்பு (Mistake Edition), புரியாத பதிப்பு (Miserable Edition), வேலைசெய்யாத பதிப்பு (Malfunctioning Edition), பெரும்பாலும் பிழைகள் (Mostly Errors), பலபிழைகள் (More Errors) என்றவாறு அழைத்தனர்.
வேறுசிலரோ இது தேவையே அற்றபதிப்பு, இதிலுள்ள பெரும்பாலான வசதிகளை கட்டணமின்றிப் பதிவிறக்கம் செய்யக் கூடிய மென்பொருட்கள் மூலம் பெற முடியும் என்றனர்.
பிற பதிப்புக்களுடனான தொடர்பு
பெரும்பாலும் அலுவலகக் கணினிகளை நோக்கிவெளிவந்த விண்டோஸ் NT சார்பான விண்டோஸ் 2000-த்தோடு வெளியான இது வீட்டுத்தேவைக்காகவே அறிமுகமானது. மைக்ரோசாப்ட் 2006, ஜூலை 11 அன்று விண்டோஸ் 98, விண்டோஸ் 98 இரண்டாவது பதிப்புடன் விண்டோஸ் மில்லேனியத்திற்கான தொழில்நுட்ப ஆதரவையும் விலக்கிக் கொண்டது. இது பழைய ஓர் இயங்குதளம் என்பதாக மைக்ரோசாப்ட் கருதுவதால் இதற்கான தொலைபேசியூடான ஆதரவையும், பாதுகாப்பு மேம்பாடுகளையும் இடைநிறுத்திக் கொண்டது.
விண்டோஸ் 2000 ஐப்போன்றல்லாமல் இயங்குதளத்தை நிறுவும் போதே கோப்புக்களை ஆவணப்படுத்தும் மென்பொருளை நிறுவமாட்டாது.[தெளிவுபடுத்துக]
Remove ads
தேவைப்படும் வன்பொருள்
விண்டோஸ் மில்லேனியத்தின் குறைந்த வன்பொருள் தேவை, 150 MHz பெண்டியம் அல்லது அதனுடன் ஒத்தியங்கும் செயலியும், 320 மெகா பைட் இடவசதியும், 32 மெகாபைட் நினைவகமும் ஆகும்.
எனினும், ஆவணப் படுத்தப்படாத ஓர் முறையில் வேகம் குறைந்தகணினிகளில் "/nm" என்னும் மாற்றி(சுவிச்)களை தருவதன் மூலம் நிறுவ இயலும்.
உசாத்துணை
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads