விண்வெளிக் கழிவு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விண்வெளிக் கழிவுகள் (Space debris) என்பன பூமியின் வட்டப்பாதையில் பூமியைச் சுற்றிவரும் கழிவுகள் ஆகும். இக்கழிவுகள் அனைத்தும் பூமியிலிருந்து செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தின் பாகங்கள் ஆகும். மேலும் பழைய செயலிழந்த மற்றும் கைவிடப்பட்ட செயற்கைக் கோள்கள் அவற்றிலிருந்து கழன்ற பாகங்கள் அனைத்தும் விண்வெளிக் கழிவுகள் எனப்படும். இவை அனைத்தும் அதி வேகத்தில் பூமியைச் சுற்றி வருகின்றன.

Remove ads
விண்வெளிக் கழிவுகள்
தற்போது கிட்டத்தட்ட 19,000 பொருட்கள் விண்வெளிக் கழிவுகள் என அடையாளம் காணப்பட்டுள்ளன. பூமியைச் சுற்றிவரும் இவற்றின் அளவு 5 சென்றிமீட்டருக்கும் அதிகம்[1].மேலும் 3,00,000 பொருட்கள் 1 சென்றிமீட்டருக்கும் குறைவான விண்வெளிக்கழிவுகளாக பூமியிலிருந்து 2000 கிலோமீட்டர்கள் தொலைவிற்குள் சுற்றி வருகின்றன.[1] சர்வதேச விண்வெளி நிலையம் பூமியிலிருந்து 300 கிலோமீட்டர்கள் முதல் 400 கிலோமீட்டர்கள் உயரத்தில் சுற்றி வருகின்றன. பெரும்பாலான விண்வெளிக் கழிவுகள் 1 சென்றிமீட்டரைவிடக் குறைவானவை.
Remove ads
விண்வெளிக் கழிவுகளின் தோற்றம்
2009 ஆம் ஆண்டின் விண்வெளி மோதல் மற்றும் 2007 சீனச் செயற்கைக் கோள் தகர்ப்பு ஏவுகணைச் சோதனை இரண்டும் 800 கிலோமீட்டர்கள் முதல் 900 கிலோமீட்டர்கள் சுற்றுப் பாதையில் நடந்தது. அதில் உடைந்த பாகங்கள் விண்வெளிக் கழிவுகளாக பூமியின் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. செயற்கைக் கோள்களின் இயக்கியின் (solid rocket motors) பாகங்கள், பழைய கைவிடப்பட்ட செயலிழந்த செயற்கைக்கோள்கள், செயற்கைக்கோள் செலுத்து வாகனத்திலிருந்து பிரிந்த பாகங்கள் அனைத்தும் விண்வெளிக் கழிவுகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
Remove ads
கழிவுகளின் விளைவுகள்
இத்தகைய விண்வெளிக்குப்பைகள் தன்னிச்சையாய் அதிவேகத்தில் விண்வெளிப்பாதையில் சுற்றி வருகின்றன. அவ்வாறு சுற்றிவரும் போது அதன் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள செயற்கைக் கோள்களின் மீது மோதி பெரும் விபத்தை ஏற்படுத்துகின்றன. இத்தகைய விண்வெளிக்கழிவுகள் விண்வெளியில் பெரும் நாசத்தை உண்டுபண்ணுகின்றன.
விண்வெளிக் கழிவுகளிலிருந்து பாதுகாப்பு
இத்தகைய மோதலினால் பாகங்கள் சேதமடையாமல் தவிர்க்க செயற்கைக் கோள்கள் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் பாகங்கள் கவசங்களால் மூடப்பட்டிருக்கும். இத்தகைய கவசங்கள் அனைத்துப் பாகங்களையும் பாதுகாப்பதில்லை. முக்கியமான பாகங்களான சூரியத் தகடுகள் (Solar panels), கண்ணாடியினாலான கருவிகள் (Optical devices) (இவை பொதுவாக தொலைநோக்கிகள்) ஆகியவை கவசங்கள் கொண்டு பாதுகாக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads