2009 செயற்கைக்கோள் மோதல்

From Wikipedia, the free encyclopedia

2009 செயற்கைக்கோள் மோதல்
Remove ads

2009 செயற்கைக்கோள் மோதல் (2009 Satellite collision) அல்லது 2009 ஆம் ஆண்டின் விண்வெளி மோதல் என்பது 2009 ஆம் ஆண்டு விண்வெளியில் பூமியின் வட்டப்பாதையில் இரண்டு செயற்கைக் கோள்கள் மோதியதைக் குறிக்கிறது.[1] 2009 பெப்ரவரி 10 ஆம் நாள் ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் 16:56 க்கு பூமியிலிருந்து 789 கிலோமீட்டர்கள் உயரத்தில் சைபீரியாவின் நேர் மேலே இவ்விபத்து நேர்ந்தது.[2] இவ்விபத்து பூமியின் தாழ் வட்டப்பாதையில் நடந்த ஒன்றாகும்.

Thumb
Thumb
மோதலில் ஈடுபட்ட இரண்டு செயற்கைக்கோள்கள்: இரிடியம் 33 (வெள்ளி மற்றும் தங்கம்) மற்றும் கோஸ்மோஸ் 2251 இன் டிஜிட்டல் ரெண்டரிங் (நீல உருளை)
Thumb
விபத்தைக் காட்டும் படம்.
Remove ads

விபத்தை ஏற்படுத்தியவை

இரிடியம் 33 (Iridium 33) மற்றும் காச்மாசு-2251 ( Kosmos-2251) ஆகிய செயற்கைக்கோள்கள் மோதிக் கொண்டன[3][4][5]. இவை இரண்டும் 42,120 கிலோமீட்டர்கள் வேகத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.[6][7] இதில் இரிடியம் செயற்கைக் கோள் இரிடியம் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குச் சொந்தமானது. காச்மாசு 2251 ருசியாவிற்குச் சொந்தமானது.

விளைவுகள்

இம்மோதலில் இரண்டு செயற்கைக் கோள்களும் சேதமடைந்தன. இதில் காச்மாசு--2251 செயற்கைக் கோளானது ரஷ்யாவால் கைவிடப்பட்ட செயலிழந்த செயற்கைக் கோள் ஆகும். இரிடியம் 33 செயற்கைக் கோள் பயன்பாட்டில் இருந்தது. காச்மாசு--2251 செயற்கைக் கோள் 1995 லிருந்து பயன்பாட்டில் இல்லை. அமெரிக்காவின் நாசா நிறுவனம் இம்மோதலினால் 10 சென்றிமீட்டர்களுக்கும் அதிகமான 1,000 பொருள்கள் விண்வெளிக் கழிவுகளாக மாறின எனத் தெரிவித்துள்ளது.[8] சூலை 2011 ல் அமெரிக்க விண்வெளிக் கண்காணிப்பு அமைப்பு 2,000 விண்வெளிக் கழிவுகள் என வகைப்படுத்தியுள்ளது.[9]

Remove ads

செயற்கைக் கோள்கள்

Thumb
மாதிரி இரிடியம் செயற்கைக் கோள்.
  • கச்மாசு-2251 செயற்கைக் கோள் 1993 ஆம் ஆண்டு சூன் மாதம் 16 ஆம் தியதி ஏவப்பட்டது. இரண்டு வருடங்களில் 1995 ன் பிறபகுதியில் கைவிடப்பட்டது.இது 950 கிலோகிராம் எடையுடையது. இது ராணுவப் பயன்பாட்டிற்கானது.[10][4]
  • இரிடியம் 33 செயற்கைக் கோள் 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் தியதி ஏவப்பட்டது. விபத்தின் போது இது பயன்பாட்டில் இருந்தது. இதன் எடை 560 கிலோகிராம்கள் ஆகும். இது தொலைத்தொடர்பு பயன்பாட்டிற்கானது.[4]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads