வித்தியாதரர்கள்

From Wikipedia, the free encyclopedia

வித்தியாதரர்கள்
Remove ads

வித்தியாதரர்கள் (Vidyadhara) (சமஸ்கிருதம் Vidyādhara, என்பதற்கு பெரும் அறிவு உடையவர்கள் எனப் பொருள். இந்து சமயத்தில் உயர் ஆன்மாக்களான வித்தியாதர்ர்கள் மந்திர ஜால விந்தைகளை நன்கு கற்றறிந்தவரகள்.[1] கயிலை மலை சிவனின் உதவியாளாக வித்தியாதரர்கள் பணிவிடை செய்கின்றனர்.[2] வித்தியாதரர்களை உபதேவதைகள் ஆவார்.[3] பௌத்த சமய நூல்களில் வித்தியாதரகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளது.[4]

Thumb
புது தில்லி, தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள வித்யாதரர்களின் புடைப்புச் சிற்பம், கிபி. 525.
Thumb
வித்தியாதர இணையர்கள்
Remove ads

புராணம் மற்றும் பிற நூல்கள்

Thumb
வானில் பறக்கும் வித்தியாதரர்

அக்னி புராணத்தில், ஆண் - பெண் வித்தியாதரர்கள் மலர் மாலகள் அணிந்து கொண்டு, அரம்பையர்கள், யட்சர்கள், யட்சினிகள், கந்தர்வர்கள், கிண்ணரர்கள் போன்ற உயர் ஆன்மா கொண்ட தேவதைகளுடன் வானுலகில் சஞ்சரிப்பர்கள் எனக் கூறுகிறது.[3]

பாகவத புராணம் சித்ரகேது என்பவன் வித்தியாதர்களின் அரசன் எனக்கூறுகிறது.[5]

சமணத்தில்

சமண நூல்களில் வித்தியாதர்ர்கள், அசுரர்கள். வானரர்கள், போன்று பறத்தல் போன்ற மாய சக்தி ஆற்றல் கொண்டவர்கள் என்றும், வித்தியாதர இனத்தின் இரண்டு குலத்தில் பிறந்தவர்களே இராவணன் மற்றும் வாலி என்றும் கூறுகிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads