விநாயக புராணம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

விநாயக புராணம் அல்லது பார்க்கவ புராணம் இந்து சமய நூல்களுள் ஒன்று ஆகும்.

நந்தி தேவரை முதற்கொண்டு எழுவது புராணங்களின் பின்னணியாகும். சிவன் புராணங்களை பார்வதிக்கு உபதேசம் செய்ததாகவும், பார்வதி அதை பிள்ளையார், முருகன், கைலாயத்தில் உள்ளவர்களுக்கு உபதேசம் செய்ததாகவும், பின்னர் அந்த உபதேசிக்கப் பட்ட புராணங்களை தான் இங்கே முப்பத்து முக்கோடித் தேவர்களுக்கும் நாற்பத்து நாற்கோடித் தேவர்களுக்கும் அவர்களிடம் இருந்து தெரியவந்து பின்னர் அவை புவிக்கு வந்தது மற்றும் அதை முனிவர்கள் அடைந்து விட்டனர் என்பது தொன்ம நம்பிக்கை ஆகும். நந்தி தேவர் சனக்குமாரர்களுக்கு உபதேசிக்க வியாசர் அவர்களிடமிருந்து இந்தப் புராணத்தைப் பெற்றார்.

புராணம் என்பது புரா கூட்டல் ணம் எனப்பிரியும். புரா என்றால் பழமை எனவும், ணம் என்றால் புதுமை எனவும் பொருளாகும். தமிழில் புராணம் என்னும் சொல் மணிமேகலையில் தான் முதன் முதலாகக் கையாளப் பெற்றிருக்கிறது. ‘காதலால் கடல் வண்ணன் புராணம் பாடினான் காண்’ என்று சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதையில் குறிப்பிடப் பெறுகிறது. புராணங்கள் தொன்மங்களாகவும், மரபு வழியிலான கர்ண பரம்பரைக் கதைகளாகவும் வழங்கப்பட்டு வருகின்றன.

புராணங்களில் குறிப்பிடத் தக்கது பார்க்கவ புராணம் ஆகும். இது விநாயக புராணம் எனவும் வழங்கப்படுகிறது. பிரம்மன் சிவனிடம் விநாயக புராணத்தை உபதேசமாகப் பெற்று வியாசருக்கு வழங்கினார் என்பது மரபு. வியாசர் பிருகுவுக்கு அதை உபதேசித்தார். பிருகு அதனை உபாசன காண்டம், கிருத காண்டம் என்னும் இரண்டு காண்டங்களாகவும் இருநூற்றைம்பது பிரிவுகளாகவும் அமைத்துப் பன்னிரண்டாயிரம் சுலோகங்களால் உலகத்திற்கு வழங்கினார்.

இது பதினெண் உபபுராணங்களுள் ஒன்று.[1]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads