வினிசியசும் டாமும்

From Wikipedia, the free encyclopedia

வினிசியசும் டாமும்
Remove ads

பிரேசிலின் இரியோ டி செனீரோவில் நடைபெறும் 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2016 கோடைக்கால மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கு வினிசியசும் டாமும் (Vinicius and Tom) முறையே நற்பேறுச் சின்னங்களாகும்.

Thumb
2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் நற்பேறுச் சின்னம் வினிசியசு (இடது), 2016 கோடைக்கால மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள்2016 கோடைக்கால மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களின் நற்பேறுச் சின்னம் டாம் (வலது)
Thumb
பாரா ட இசூக்காவிலுள்ள ஒலிம்பிக் பூங்காவில் வினிசியசும் டாமும்
Remove ads

வரலாறு

2016 கோடை ஒலிம்பிக் மற்றும் மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக்கிற்கு நற்பேறுச் சின்னங்களை உருவாக்க தேசிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன; இதில் சாவோ பாவுலோ சேர்ந்த அசைபட நிறுவனம், பேர்டோ, தேர்ந்தெடுக்கப்பட்டது.[1] இவர்கள் வடிவமைத்த சின்னங்கள் நவம்பர் 23, 2014இல் வெளிப்படுத்தப்பட்டன; இவற்றின் பெயரைத் தேர்ந்தெடுக்க பொதுமக்கள் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. திசம்பர் 14, 2014இல் "வினிசியசும் டாமும்", "ஓபாவும் ஈபாவும்" , "டிபா டுக்கும் எசுகுயின்டிமும்" என்ற பெயர்களில் வினிசியசும் டாமும் பெயருக்கு 323,327 வாக்குகள் (44%) கிடைத்தன. பிரேசில் நாட்டுப் புனைவுக் கதைகளில், வினிசியசும் டாமும் "பிரேசிலியர்களின் மகிழ்ச்சியிலிருந்து உருவானவர்கள்" ஆகும்.[2] வணிக மனப்படிம இயக்குநர் பெத் லூலா இந்த சின்னங்கள் பிரேசிலியப் பண்பாடு மற்றும் மக்களின் பன்மயமையைக் காட்டுவனவாக உள்ளதாக் கூறியுள்ளார்.[3][4]

பிரேசிலிய பாடலாசிரியர் வினிசியசு டி மோராசு நினைவுறுத்தி கோடை ஒலிம்பிக்கின் சின்னம், வினிசியசு என்ற பெயரிடப்பட்டுள்ளது. வினிசியசின் வடிவம் பிரேசிலிய காட்டுயிரை எதிரொளிக்கின்றது; "பூனைகளின் விரைவியக்கம், குரங்குகளின் அசைவாட்டம், பறவைகளின் நளினத்தை" இணைக்கின்றது.[5] இந்த கதாபாத்திரத்தின் கைகளையும் கால்களையும் எவ்வளவு தொலைவு வேண்டுமானாலும் நீட்டலாம்.[5] இசைக்கலைஞர் டாம் ஜோபிம் நினைவுறுத்தி மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக்கின் சின்னம், டாம் பெயரிடப்பட்டுள்ளது. டாமின் வடிவமைப்பு பிரேசிலியக் காடுகளில் உள்ளத் தாவரங்களை 'எதிரொளிக்கின்றது; டாமின் தலையிலுள்ள இலைகளிலிருந்து எந்தப் பொருளையும் வெளியிழுக்கலாம்.[3]

இவர்களைக் கொண்டு கேலிச்சித்திரத் திரைப்படம் ஆகத்து 5, 2015 அன்று கார்ட்டூன் நெட்வொர்க் தொலைக்காட்சி அலைவரிசையில் வெளியானது.[6]

Remove ads

மேற்சான்றுகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads