விமலநாதர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விமலநாதர் (Vimalnath), சமண சமயத்தின் 13வது தீர்த்தங்கரர் ஆவார். சமணச் சாத்திரங்களின் படி, இச்வாகு குல மன்னர் கிருதவர்மனுக்கும், இராணி சியாமாவிற்கும் காம்பில்யம் நகரத்தில் பிறந்த விமலநாதர், கர்மத் தளைகளைக் கடந்து சித்த புருஷராக விளங்கியவர். இவர் தற்கால ஜார்க்கண்டு மாநிலத்தின் சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.[1][2]
பொன்னிற மேனியுடைய விமலநாதரின் வாகனம் பன்றி ஆகும். உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பண்டைய காம்பில்யம் நகரத்தில் உள்ள சமணக் கோயிலில் விமலநாதருக்கு தனிச் சன்னதி உள்ளது.
Remove ads
படக்காட்சியகம்
- விமலநாதர் கோயில், பீப்வேவாடி
- 15ம் நூற்றாண்டு விமலநாதரின் சிற்பம், லாஸ் ஏஞ்சல் அருங்காட்சியகம்
- விமலநாதரின் சிற்றோவியம், ஜோத்பூர் ஓவியம், கிபி 1800
- விமலநாதரின் சிற்பம், பிசன்கர்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads