வியட்டிய மொழிகள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வியட்டிய மொழிகள் ஆத்திரேலாசிய மொழிகள் (ஆத்திரேலிய-ஆசிய) குடும்பத்தைச் சேர்ந்த உள்குடும்ப மொழிகள். முன்னர் வியட்டிய மொழிகளை வியெட்-முவோங் அல்லது அன்னம்-முவோங் மொழிகள் என்று மேற்குல மொழியிய்லாளர்கள் அழைத்தனர். ஆனால் இப்பொழுது வியட்-முவோங் மொழிகள் வியட்டிய மொழிகள் குடும்பத்தின் ஓர் உட்கிளை என்று கருதுகின்றனர்.

வியட்னாமிய மொழி (வியட்னாமியம்), ஓர் ஆத்திரேலாசிய (ஆத்திரேலிய-ஆசிய) மொழியாக 19 ஆவது நூற்றாண்டின் நடுபகுதியில் மொழிக்குடும்பமாக அறியப்பட்டது. வியட்னாமிய மொழியில் பெருமளவு சொற்கள் கண்ட்டோனீசு வகைச் சீன மொழி மற்றும் தாய்-கடை மொழிகளுடன் நெருங்கிய தொடர்புடையன. வியட்னாமிய மொழி, கண்ட்டோனீசுச் சீனம், தாய்லாந்து மொழிகள் போன்றே ஒற்றை அசை அல்லது உயிர்மெய் ஒலிகள் கொண்ட சொற்களைக் கொண்ட மொழி. இவ்வகையில் இது முதலுரு ஆத்திரேலாசிய மொழியின் பண்பைக் கொண்டிருக்கவில்லை. இதனாலேயே வியட்னாமிய மொழியானது கண்ட்டனீசு, தாய் மொழிகளை விட குமேர் மொழிகளுக்கும் நெருக்கமான மொழி என்னும் கருத்துக்கு மிகுந்த எதிர்ப்பு உள்ளது.

Remove ads

வகைப்பாடு

  • அரேம் (Arem): இம்மொழி மற்ற வியட்டிய மொழிகளைப் போன்ற மூச்சுவெளிப்பாடு இல்லாத மொழி, ஆனால் வியட்டிய மொழிகளைப் போலவே அடித்தொண்டை மெய்யொலிகளைக் கடையொலிகளாக கொண்டது.
  • குஓவ்ய் (தோ) (Cuôi (Thô))
  • அகியூ (தவுங்) (Aheu (Thavung)): இம்மொழியானது, மூச்சு வெளிவிட்டும் விடாதும் ஏற்படுத்தும் ஒலிகளை நான்கு நிலையான பாகுபாட்டுடன் முற்றுப்பெறும் மெய்யொலிகள் தொண்டையொலியாக இருக்கும் வகையைக் காட்டுவது. இது பியரிய (Pearic) மொழிகளை மிக ஒத்தது, ஆனால் அவற்றில் தொண்டையொலிப்பு உயிரொலியாக இருக்கும்.
  • ரூச், சச், மாய், சுர்த் (Ruc, Sach, May, and Chưt): ஒரு கிளைமொழிகள் குழுமம்.; நாங்கு நிலைகளான எடுத்தலோசைகள் கொண்டவை.
  • மாலெங் ('போ, பக்கட்டன்) (Maleng (Bo, Pakatan)): ரூச்-சச் (வ்) இல் உள்ளது போன்ற எடுத்தல் ஓசைகள்.
  • பொங், உங், தும், கொங்-கெங் (Pong, Hung, Tum, Khong-Kheng)
  • வியட்-முவோங் (Viêt-Mương): வியட்னாமியமும் முவோங் மொழியும். இவ்விரண்டு கிளை மொழிகளும் வியட்டிய மொழிகளின் சொற்தொகுதியோடு ஒப்பிடும் பொழுது ஏறத்தாழ 75% பொதுவானவை. ஒலிப்பின் எடுத்தலோசை உயர்வு-தாழ்வு வேறுபாடுகளிலும் 5-6 ஓசைகள் கொண்டு ஒத்துள்ளது. வியட்டிய மொழிகளில் பொதுவாக மூன்று கீழ் ஓசைகளும் மூன்று உயர் ஓசைகளும் இருக்கும், அவை முறையே தம்முடைய முன்னுருவான மொழிகளில் உள்ளவாறே முதலெழுத்தொலிகள் ஒலிப்புடை மெய்யொலிகளாகவும், ஒலிபற்ற மெய்யொலிகளாகவும் வருபவை. பின்னர் இவை கடைசியாக வரும் மூலமெய்யொலியைப் பொருத்துக் கீழ்க்காணுமாறு பிரிவுபட்டன: சீரான ஓசைகள் திறந்த உயிரொலிகள் கொண்டவை அல்லது கடையொலிகளாக மூக்கொலிகள் கொண்டவை; உயர்ந்தெழும் ஓசையும் தாழ்ந்து விழும் ஓசையும் ஒலிப்பற்ற மெய்யொலிகளாகும் - இவை பின்னர் மறைந்துவிட்டன. தாழ்ந்த ஓசைகள் கடையொலி காற்றொலிகளாக மாறி, அவையும் மறைந்து விட்டன. அடித்தொண்டை உயரோசைகளாக இருந்தவை, அடித்தொண்டை மெய்யொலிகளாக மாறி, பின்னர் அவை அடித்தொண்டையல்லா ஒலிகளாக (deglottalized.) மாறிவிட்டன.
Remove ads

மேலும் படிக்க

  • Barker, M. E. (1977). Articles on Proto-Viet-Muong. Vietnam publications microfiche series, no. VP70-62. Huntington Beach, Calif: Summer Institute of Linguistics.

இவற்றையும் பார்க்கவும்

  • மோன்-குமேர் மொழிகள்

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads