வியட்நாமியப் பல்லூடகக் கூட்டிணையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வியட்நாம் பல்லூடகக் கூட்டிணையம் (Vietnam Multimedia Corporation) (வியட்நாம் தொலைக்காட்சிக் கூட்டிணையம் (VTC))என்பது 1988 பிப்ரவரியில் நிறுவப்பட்ட ஒரு பல்லூடக்க் கூட்டிணையம் ஆகும். இதற்குத் தொலைக்காட்சி நிலையங்களைக் கட்டியமைக்கும் பணி தரப்பட்டது. இதை (VTC)) 2003 ஜூலையில் வியட்நாம் அஞ்சல், தொலைவரித் துறை விலைக்கு வாங்கியது.
Remove ads
தோற்றம்
அஞ்சல் அமைச்சகம் (வியட்நாம் தொலைத்தொடர்புகள்) 1988 பிப்ரவரியில் தொலைக்காட்சி ஒளிபரப்பை (வியட்நாம் தேசியத் தொலைக்காட்சி) நிறுவியது. இதுவே பின்னர் வியட்நாம் தொலைக்காட்சி கூட்டிணையமாக (VTC) மாறியது.இது 1992 செப்டம்பரில் தொழில்நுட்பத் தகவல், வளர்ச்சிக்கான முதலீட்டுக் குழுமமாக (INTEDICO) பண்பாட்டு (தகவல்) அமைச்சகத்தின் கீழ் இயங்கலானது. பிறகு, 1993 நவம்பரில் வியட்நாமில் தொலைக்காட்சித் தொழில்நுடப வளர்ச்சிக்கான முதலீட்டுக் குழுமமாக மாறியது. இது 1996 திசம்பர் 10 இல் TELEXIM RATIMEX உடன் இணைந்தது (முடிபு எண் 918 - QD / தொகு-வியட்நாம் தொலைக்காட்சி). மேலும் சில சட்டவியலான மாற்றங்கள் 2003 இல் (முடிபு எண் 129/2003/QD- TTg 26 ஜூன் 2003)இல் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், 2005 இல் INTENDICO அர்சு தாய்க்குழுமத்தின் பகுதியாகியது, அதாவது தொலைத்தொடர்பு கூட்டிணையத்தின் பகுதியாக (முடிபு எண் 192/2005/QD-TTg 29 ஜூலை 2005) மாறியது.
Remove ads
தொலத்தொடர்புக் கூட்டிணையத்தின் துணைக் குழுமங்கள்
இதன் துணைக்குழுமங்களாவன:
- VTC நகர்பேசி நிறுவனம்
- VTC எண்மத்தொடர்பு (Digicom) நிறுவனம்
- எண்மத் தொலைக்காட்சி நிறுவனம்
- VTC தொழில்நுட்ப, எண்ம உள்ளடக்கக் குழுமம் (VTC Intecom)
- தொலைதொடர்புக் கூட்டிணையம் VTC.
- கூட்டிணையத் தீர்வுகள் வ-து, VTCதொலைத்தொடர்புகள் தொழில்நுட்ப உறுப்பினர்
- வரம்புறு குழுமம், VTC நடுவண் பல்லூடகத் தொலைத்தொடர்புகள் உறுப்பினர்
- வரம்புறு குழுமம் , VTC பல்லூடகத் தெற்குத் தொலைதொடர்புகள் உறுப்பினர்
- தொலைக்காட்சி ஊடக வளர்ச்சிக் குழுமம் (CTC)
- VTC (தொலைத்தொடர்புக் கருவிகள்) தொழில்வணிகக் கூட்டிணையம்
- VTC (மின்ன்னியல் ஊடகம்) கூட்டுப் பங்குவணிகக் குழுமம்
- மின்னனியல் கூட்டிணையம், வியட்நாம் வடத் தொலைக்காட்சி
- சேவைக் கூட்டிணையம் (பன்னாட்டு ஒத்துழைப்பு)
- தொலைக்காட்சித் தொழில்நுட்பப் பரிமாற்றக் குழுமம் – VTC தொலைத்தொடர்புகள்
- VTC தொலைக்காட்சிப் பொழுதுபோக்கு, வணிகநிகழ்ச்சித் தொழில்வணிக்க் குழுமம்
- தொலைத்தொடர்புகள் நட்புறவுக் கூட்டிணையம்
- VTC தொலைத்தொடர்புப் பள்ளி
- VTC கலைக்கூடம் (2010 பிப்ரவரியில் நிறுவப்பட்ட்து)
Remove ads
இணைய விளையாட்டுகள்
- ஆப்பிரிக்கக் குழு: மாசாங் மென்பொருள் (6 மே 2006).
- இணையக் குரல்தேர்வு (Audition Online): T3 பொழுதுபோக்கு, இணைய யேதாங் (8 மே 2006). 2009 செப்டம்பரில் VTC நிறுவனமும் VinaGame நிறுவனமும் விளையாட்டை வெளியிடுவதில் உரிமைகோரி போராடின. இச்சிக்கல் Game Gate நிறுவனம் உருவாக வழிவகுத்தது.
- Cross-fire and MMOFPS Special Force of the FPT (SF); Sudden Attack (SA); the VinaGame; Cross Fire (CF), the VTC game. இந்த மூன்று விளையாட்டுகளில் (SF, SA,CA ஆகியவற்றில்) CF மிகவும் விரும்பிப் பலர் விளையாடிய விளையாட்டாகும்.
- FIFA Online 2 (FIFA 1 இந்தோனேசியாவில் இணையத்தில் வெளியிடப்பட்டது).
- Atlantica Online, இந்தக் கட்டற்ற MMORPG விளையாட்டு, உலகில் மிகச் சிறந்ததாகும், 2008.
- Kart Rider ( இது 2010 ஜூலையில் விற்பனையில் இருந்து நீக்கப்பட்டது).
VTC கலைக்கூட இணைய விளையாட்டுகள்
- படையணி (Squad): இது ஒரு தனியர் முப்பருமானத்தில் துப்பாக்கி சுடுதல் விளையாட்டு ஆகும்(MMOFPS); இது எமஜெண்ட் குழுமத்தின் கேம்பிரியோ லைட்சுபீடு தளத்தில் விளையாட்டுப் பொறியால் (game engine) கட்டியமைத்தது. இது முப்பருமானத்தில் அமைந்த கருப்பு நாவாய்ப்படை கருப்பொருள் உள்ளடக்கம் உள்ள இயல்பான விளையாட்டாகும்.
- தலைமுறை 3 (Generation 3):இது மைக்ரோசாப்ட் சில்வர்லைட் தளத்தில் கட்டியமைத்த விளையாட்டு ஆகும். இது ஐரோப்பிய இடைக்கால நம்பவைக்கும் ஒக்கியாத்து எனும் வீரனின் கதையை நவில்கிறது. இதில்கால்மார், தார்கார்து, நார்வேல்சு ஆகிய மூன்று நாடுகள் அடங்கும். இதில் விளையாடுபவர்கள் ஊழலை எதிர்க்கும் படைதளபதிகளாக விளையாடி மூன்று நாடுகளை ஒற்றுமைப்படுத்துகின்றனர்.
- கடல்வண்ணங்கள் (Colours of Ocean): இது இளைஞருக்கான கட்டற்ற சமூக வளர்ச்சி விளையாட்டு.
- அரியகாட்சி (Showbiz):இது இசை ஆர்வலருக்கான சமூக விளையாட்டு.
- சுற்றுலா 247 (Tour 247): இது சுற்றுலா மேலாண்மை சார்ந்த, சுற்றுலா விரும்பிகளுக்கான சமூக மேலாண்மை விளையாட்டு.
Remove ads
பிற ஆக்கங்கள்
VTC நிறுவனத்தின் பிற ஆக்கங்களாவன: செய்தித் தாள்கள், தொகா இதழிலும் இணையத் தொலைக்காட்சியிலும் செய்தி நிகழ்ச்சிநிரல்கள்; நகர்பேசி சேவையை ஏற்றவல்ல படிமங்களும் குரலொலிகளும்; இணைய வங்கி, இலவசக் கட்டணத் தொகைசெலுத்த இணையதளம்; நகர்பேசிவழித் தொலைக்காட்சியும் ஊடாட்டத் தொலைக்காட்சியும்.
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
- VTC News Site
- VTC Site 1
- VTC Site 2 பரணிடப்பட்டது 2012-02-15 at the வந்தவழி இயந்திரம்
- VTC Online
- VTC Intecom
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads