வியட்நாம் இனக்குழுக்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

Remove ads

வியட்நாம் 50 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பல இனக்குழுக்கள் வாழும் நாடாகும் (வியட்நாம் அரசு 54 இனக்குழுக்களை இனங்கண்டு ஒப்புக்கொண்டுள்ளது). ஒவ்வொரு இனக்குழுவுக்கும் ஒரு மொழியும் வாழ்முறைமையும் பண்பாட்டு மரபும் உண்டு. மலைவாழ் இனக்குழுக்கள் பலவற்றையும் இணைத்து மேற்கத்தியர்கள் மொந்தாகுநார்டு அல்லது தேகர் எனக் குறிப்பிடுகின்றனர். இவற்ரில் முதன்மையான பெரும்பான்மை இனக்குழுக்களாவன: கின் (வியட்) 86.2%, தாய் 1.9%, தை இனம் 1.7%, மூவோங் 1.5%, கேமெர் குரோம் (கோ மே குரோம்) 1.4%, கோவா 1.1%, நூங் 1.1%, கிமோங் 1%, மற்றவர்கள் 4.1% (1999 கணக்கெடுப்பு). இனக்குழுவுக்கான வியட்நாமியச் சொல் இங்குவாயி தியேயி சோ (người thiểu số) அல்லது தான் தோசு தியேயி சோ (dân tộc thiểu số) என்பதாகும்( இதன் நேர்பொருள் "சிறுபான்மையர்"). மலைவாழ் இனக்குழுக்களின் தனித்த இயல்பு வீட்டிலும் பண்ணையிலும் நகரிலும் பயணத்திலும் வண்ணவண்ண உடைகளில் மிளிர்வதாகும். ஆனால் தென்வியட்நாமிலும் கம்போடியாவிலும் இலாவோசிலும் மயன்மாரிலும் சினாவிலும் பாப்புவா நியூகினியாவிலும் இன்னும் பல நாடுகளிலும் உள்ள பல இனக்குழு மக்கள் அன்றாட வேலைகளில் ஈடுபடும்போது வண்ண ஆடைகளை அணிவதில்லை. மேலும் ஓர் இனக்குழு மக்களின் உடை வண்னம் மற்றவரில் இருந்து வேறுபடுவதால் சமூக அணிதிரட்சி பலவண்ணக் கோலத்துடன் மிளிரும்.

Remove ads

இனக்குழுக்களின் பட்டியல்

மக்கள்தொகை தரவுகள் 2009 கணக்கெடுப்பில் இருந்து எடுக்கப்பட்டவை [1]

முதன்மை அமைச்சரின் வலைத்தளத்தின்படி, 2014 ஏப்பிரல் கணக்கெடுப்பின்படி, வியட்நாம் மக்கள்தொகை 90.493.352 ஆகும்.[2]

மேலதிகத் தகவல்கள் இனக்குழு, மக்கள் ...
Remove ads

அலுவலகப் பட்டியலில் இல்லாத இனக்குழுக்கள்

உள்நாட்டவர்கள்

  1. நிகுவோன் – இவர்கள் மூவோங் குழுவைச் சார்ந்தவர்களாக இருக்கலாம். இப்போது இவர்கள் வியட் (கின்) குழுவில் அரசால் வகைபடுத்தப்படுகின்றனர். நிகுவோன்களே தம்மை வியட் இனக்குழுவுடன் இனங்காண்கின்றனர்; இவர்களது மொழியும் வியட்டியத் துணைக்குடும்ப மொழியான வியட்-மூவோங் கிளையின் ஓர் உறுப்பாகும்.
  1. சுயி மக்கள் (நிகுவோய் தூய்) -அரசால் பா தேன் மக்கள் என வகைபடுத்தப்படுகின்றனர்.
  1. வியட்நாமின் இணையச் செய்தித்தாளான தந்திரியின்படி, 2008 செப்டம்பரில் தியூவா தியேன் குவே மக்கள் குழு வியட்நாமில் வாழும் இவர்களைப் பற்றி விரிவாக ஆயும் திட்டம் ஒன்றை அறிவித்தது. இவர்கள் பா கோ அல்லது பா சோ எனப்படும் இனக்குழுவினர் ஆவர். இந்த இனக்குழு பெரிதும் ஆலூவோய் சார்ந்த புறநகர் மாவட்டமான தியுவா தியேன் குவேயிலும் குவோங் கோவா (குவாங் திரி) மலைப்பகுதியிலும் வாழ்கின்றனர்.[3][4] இப்போது இவர்கள் தா ஓய் இனக்குழுவாக வகைபடுத்தப்படுகின்றனர்.
  1. பியுனாங்/பினாங் மக்கள். இந்த இனக்குழு பெரிதும் வடகிழக்கு கம்போடியாவில் வாழ்கின்றனர். என்றாலும் அமெரிக்கப் போரின்போது பலர் வியட்நாமுக்குச் சென்று பியுவான் மா தியுவாட் உயர்சம வெலி சுற்றி வாழத் தொடங்கினர். போர் முடிந்ததும் பெரும்பாலானவர்கள் கம்போடியாவுக்குத் திரும்பினாலும் சிலர் அங்கேயே வாழ்கின்றனர். இது evidenced by the story of குவின் தீ கதையில் இருந்து தெரியவந்துள்ளது. பியுனாங் மக்களில் மிகச் சிலரே வியட்நாமில் உள்ளனர். கிறித்தவ இயக்க்க் கூட்டமைப்பு கம்போடியாவில் வாழும் இவர்களை விரிவாக ஆய்ந்து இவர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டி வெளியிட்டுள்ளனர். இவர்களின் வரலாற்றை அறிந்தவர்கள் இக்கூட்டமைப்பினர் மட்டுமே.

ஐரோப்பியர்கள்

ஐரோப்பியர், வட அமெரிக்கர், ஆத்திரேலியர், ஆசியர்(வியட்நாமியர் அல்லாதார்) ஆகியோர் வியட்நாமில் வாழ்கின்றனர். இவர்களில் தற்காலிகமாக வாழ்பவரும் புலம்பெயர் தொழிலாளர்களும் திருமண உறவாலோ பிரான்சுக் குடியேற்றக்கால குடியிருப்புக் கால்வழியாலோ நிலைத்து வாழும் மக்களும் அடங்குவர். விடுதலைக்குப் பிறகு பெரும்பாலான ஐரோப்பியர் வியட்நாமை விட்டு வெளியேறிவிட்டனர்.

Remove ads

மேலும் காண்க

தகவல் வாயில்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads