வியாசதீர்த்தர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வியாசதீர்த்தர் (Vyasatirtha) (அண். 1460 – அண். 1539[1]) இந்து சமயத்தின் துவைதப் பிரிவைப் பற்றி நன்கறிந்த சான்றோர் ஆவார். இவர் வியாசராயர் என்றும் சந்திரிகாசாரியார் என்றும் அழைக்கப்படுகிறார். மெய்யியில் வாதம் செய்யுமளவுக்கு திறன் பெற்றிருந்தார்.[2] சோமநாதர் என்னும் புலவர் எழுதிய வியாசயோகிசரிதை என்னும் கவிதைத் திரட்டிற்குப் பிறகே இவரைப் பற்றி உலகம் அறியத் தொடங்கியது. இவர் கருநாட்டகாவில் உள்ள மைசூரில் பிறந்தவர். இவர் இந்திய நாட்டின் பல்வேறு இடங்களில் அனுமன் சிலைகளை நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.[3] இவர் கன்னடத்திலும் சமஸ்கிருதத்திலும் பல பாடல்களை இயற்றியுள்ளார்.[4] நியாயமிர்தம், தர்க்கதாண்டவம் ஆகியன இவரின் படைப்புகளில் குறிப்பிடத்தக்கன.[5][6][7][8]
Remove ads
தரவுகள்
மூலங்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads