கால்சாவின் மரபுடமை

From Wikipedia, the free encyclopedia

கால்சாவின் மரபுடமைmap
Remove ads

கால்சாவின் மரபுடமை ( Punjabi: ਵਿਰਾਸਤ-ਏ-ਖਾਲਸਾ, விரசத்-இ-கால்சா, Virasat-e-Khalsa) பஞ்சாபின் தலைநகரம் சண்டிகர் அருகிலுள்ள புனித நகரம் அனந்த்பூர் சாகிபில் உள்ள சீக்கிய அருங்காட்சியகமாகும். சீக்கிய வரலாற்றின் 500 ஆண்டுகளையும் பத்தாவதும் கடைசி குருவுமான குரு கோவிந்த் சிங்கின் புனிதமொழிகளுக்கேற்ப கால்சா உருவானதின் 300ஆவது ஆண்டுவிழாவினையும் கொண்டாட இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, அமைவிடம் ...
Remove ads

கட்டடம்

பள்ளத்தாக்கின் இருபுறங்களிலிலுமாக இரண்டு வளாகங்கள் உள்ளன; இவை அலங்கார பாலமொன்றால் இணைக்கப்பட்டுள்ளன:

  • சிறிய மேற்கத்திய வளாகத்தில் நுழைவு முன்றிலும் 400 பேர் அமரக்கூடிய அரங்கமும் இரண்டு மாடி ஆய்வு, குறிப்புதவி நூலகமும் மாற்றப்படும் கண்காட்சியகங்களும் அமைந்துள்ளன.
  • கிழக்கு வளாகத்தில் வட்டமான நினைவக கட்டிடமும் விரிவான, நிலைத்த கண்காட்சி இடமும் அமைந்துள்ளன; இரு தொகுதிகளாக அமைந்துள்ள இந்த காட்சிக்கூடங்கள் இப்பகுதிக் கோட்டைகளின் கட்டிடவியலை நினைவுறுத்துகின்றன. அருங்காட்சியகங்கள் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன; சத் (மெய்மை), தயா (பரிவு), சந்தோக் (நிறைவு), நிம்ரதா (எளிமை) மற்றும் பியார் (அன்பு) என்ற சீக்கியத்தின் மையக் கொள்கையான ஐந்து ஒழுக்கங்களைக் குறிப்பனவாக அவை உள்ளன.

கட்டிடங்கள் அந்த இடத்திலேயே ஊற்றப்பட்ட காங்கிறீட்டால் கட்டப்பட்டுள்ளது; சில உத்தரங்களும் தூண்களும் மூடப்படாது உள்ளன; ஆனால் பெரும்பாலான கட்டமைப்புகள் உள்ளூர் தேன் வண்ண கற்களால் வேயப்பட்டுள்ளது. இரட்டை வளைவைக் கொண்டுள்ள கூரைகள் எஃகினால் வேயப்பட்டுள்ளன. இரவில் இவை வானத்து ஒளியை எதிரொளித்து பள்ளத்தாக்கிலுள்ள நீர்நிலைகள் இவற்றை மீள் எதிரொளிக்கின்றன.[1]

இந்தக் கட்டிடத்தின் கட்டிடவடிவியலை மோஷே சாஃப்தீ நிறுவனத்தினர் வடிவமைத்துள்ளனர்.

கேள்-காண் அடக்கம், திரைப்படங்கள், திறந்தவெளி இசை மற்றும் விவரணங்களை பாபி பேடியின் கலைடோசுகோப் நிறுவனம் வடிவமைத்து உருவாக்கியுள்ளனர்.

Remove ads

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads