நோன்பு
உணவைக் குறைத்தல் அல்லது உண்ணாதிருத்தல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நோன்பு என்பது பொதுவாக குறிப்பிட்ட நேரத்திற்கு உணவு உண்ணாமை அல்லது உணவைக் குறைத்தல் என்பதாகும். இது ஒரு சமயச் சடங்கின் பகுதியாகவும் மேற்கொள்ளப்படும். மேலும் இது உண்ணாநிலை மற்றும் பிற புலனடக்கக் கட்டுப்பாடுகளைக் குறிக்கும் சொல்லாகும்.
இந்துக்களின் நோன்பு
இந்துக்கள் ஆன்ம ஈடேற்றங் கருதிச் செய்யும் சாதனைகளில் ஒன்று விரதம். விரதம் என்னும் சொல் உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல் எனப் பொருள்படும். இந்து மதப் புராணத்தில் 27 வகையான உபவாச விரதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமணர்களின் நோன்பு
சமண சமயத்தவர் வீடுபேறு அடைவதற்காக சல்லேகனை எனும் உண்ணா நோம்பிருந்து உயிர்விடுவதைக் குறிக்கும். [1]
முஸ்லிம்களின் நோன்பு
ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகளை அதிகம் செய்யும் மாதம், பிழைப்பொறுப்புத் தேடும் மாதம், அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் வாய்ப்பைப் பெறும் மாதம், சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதம், ஷைத்தான்கள் விலங்கிடப்படும் மாதம், ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க ஒரு இரவைக் கொண்ட மாதம், நரகவாதிகள் நரகத்திலிருந்து விடுதலை பெறும் மாதம், குர்ஆனை இவ்வுலகத்தில் இறக்குவதற்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்த மாதம், துஆக்கள் அங்கீகரிக்கப்படும் மாதம் என்பது இஸ்லாமிய நம்பிக்கை.
வணக்கங்களைச் செய்பவர்களுக்கு கூலியாக மறுமையில் அல்லா ( தமிழில் 'இறைவன்') சுவர்க்கத்தை ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றான் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும். இந்த வணக்கங்களின் வரிசையில் உள்ளதுதான் நோன்பு. நோன்பு என்னும் வணக்கம் மற்ற வணக்கங்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் தியாகங்களுக்கு முற்றிலும் மாறுபடுகின்றது. நோன்பு என்பது பசி, தாகம், இச்சை, இவைகளை இறைவனிடத்திலுள்ள நன்மையை எதிர்பார்த்தவராக நோன்பு மாதத்தின் பகல் நேரத்தில் கட்டுப்படுத்திக் கொள்வதாகும். ஆக சடங்காக இல்லாமல் வணக்கம் என்ற எண்ணத்தில் செய்வதாகும். அதாவது நோன்பின் நோக்கமே இறையச்சத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான் என்பது இஸ்லாமிய நம்பிக்கை.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads