விரிநிலை வேளாண்மை

From Wikipedia, the free encyclopedia

விரிநிலை வேளாண்மை
Remove ads

விரிநிலை வேளாண்மை (Extensive farming) என்பது விரிவான நிலப்பரப்பில் சிற்றளவு உழைப்பும் உரமும் முதலீடும் பயன்படுத்தி செய்யும் வேளாண்மை முறையாகும்.இது இயல்பாகவே முதலில் தொழில்புரட்சிக்கு முன்பு உலகளாவிய பரப்பில் நிலவிய வேளாண்மை முறையாகும்.

Thumb
விரிநிலை மலை வேளாண்மை அமைப்பில் எர்துவிக் வகை செம்மறி ஆடுகள், இலேக் மாவட்டம், இங்கிலாந்து. வேலிகட்டாத மேற்பகுதிக்குச் செம்மறிகள் தடையின்றி ஏறிச் செல்லுதல்.

வேளாண் அமைப்புகள்

Thumb
குறைந்த உள்ளீடும் விளைச்சலும் அமைந்த விரிநிலை வேளாண்மையில் ஆடுகள் அல்லது மாடுகள் தொடர்ந்து மேய்தல்.

விரிநிலை வேளாண்மையில் குறைவான வேளாண் விளைச்சலே அமைவதால், வழக்கமாக அதில் ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன. விரிவான பரப்பளவில் இத்தகைய முறையில் கோதுமையும் புல்லரிசியும் எண்ணைய்ப் பயிர்களும் பிற கூலப்பயிர்களும் பேரளவில் பயிர் செய்யப்படுகின்றன. எ.கா: ஆத்திரேலியா முரே-டார்லிங் படுகை இங்கு மண்வளம் குறைந்துள்ளதால் விளைச்சலும் கு. றைவாகவே அமைகிறது. ஆனாலும் இது சமவெளியாக அமைவதால் குறைந்த உழைப்பிலேயே நிறைவான விளைச்சல் காண்படியாகிறது. மேய்ச்சல் வாழ்க்கை விரிநிலை வேளாண்மைக்குச் சிறந்த எடுத்துகாட்டாகும். இங்கு மேய்ச்சலாளர்கள் பண்ணையின் புல்வெளியில் தங்கள் கால்நடைகளை பகலில் சூரிய ஒளியில் மேய விடுவர்.

Remove ads

புவிப்பரப்பியல்

விரிநிலை வேளாண்மை பயிரிட போதுமான நீர்வளம் இல்லாத கண்டங்களின் நடுவண் அகலாங்குகளிலும் வறட்சி மிக்க பாலை நிலங்களிலும் (கிடைவரைகளில்) அமைகிறது. செறிநிலை வேளாண்மையை விட விரிநிலை வேளாண்மைக்குக் குறைவான மழைப்பொழிவே போதும். செலுத்தப்படும் உழைப்பையும் முதலீட்டையும் பொறுத்த வரையில் பயிரிடும் பரப்பளவு மிகவும் பெரியதாகும். பெரும்பாலான மேற்கு ஆத்திரேலியப் பகுதிகளில் 1957 இல், மேய்ச்சல் நிலங்கள் ஒரு சதுரக் கல்லுக்கு ஒராடே மேயும் அளவுக்கு வறியதாக விளங்கின.[1]

மக்களின் தேவையின் அளவு பயிரிடல், கால்நடை மேய்த்தல் என இருவகை வேலைப் பிரிவினைகளை உருவாக்கியது போலவே, வட்டார மழையளவு, தாவர அளவு, வேளாண் செயல்பாடுகள் ஆகியவற்றைப் பொறுத்து இந்த இரு வேலைப் பிரிவினைகளுக்குள் மேலும் உட்பிரிவினைகளும் அமைய வாய்ப்புள்ளது.

Remove ads

மேம்பாடுகள்

விரிநிலை வேளாண்மை செறிநிலை வேளாண்மையை விட பல மேம்பாடுகளைக் கொண்டுள்ளது: பேரளவு பரப்பில் வேளாண்மை மேற்கொள்ள அலகுப் பரப்புக்கான உழைப்புப் பயன்பாடு குறைவாகவே அமைய வேண்டும். குறிப்பாக கூரை வேய்தல் போன்ற செலவு மிக்க மாற்றங்கள் ஏதும் இருக்கக் கூடாது. பேரளவு தட்டையான சமதளப் பரப்பில் எந்திர மயமாக்கலை விளைவு மிக்கபடி பயன்படுத்தலாம். உழைப்பின் பேரளவு திறமை விளைபொருள் விலைகளைக் குறைக்கிறது. விலங்குகள் விடுதலையாக கட்டற இயங்க வழியுள்ளதால் பொதுவாக விலங்கு நலவாழ்வு பேரளவில் மேம்படுகிறது. உரம் போன்ற ஊள்ளீடுகள் குறைந்த அளவிலேயே வேண்டப்படுகிறது. கள மேய்ச்சல் நிலத் தாவரங்களையே விலங்குகள் மேய்வதால், வேற்ருத் தாவரச் சிரப்பினச் சிக்கல் ஏதும் அமைவதிள்லை. வட்டாரச் சுற்றுச்சூழலும் மண்வளமும் வேதிப் பொருள்களால் சிதைவுறுதல் இல்லை. வேளாண்மை எந்திரங்கள், அறிவியல் முறைகளின் பயன்பாடு பேரளவு பயிர் விளைச்சலுக்கு வழிவகுக்கிறது.

குறைபாடுகள்

விரிநிலை வேளாண்மையில் கீழ்வரும் குறைபாடுகள் உண்டு:[2]

குறுகிய கால அளவில் விரிநிலை வேளாண்மையின் விளைச்சல் செறிநிலை வேளாண்மையை விட குறைவாக அமைகிறது.

பேரளவு நிலத்தேவை காட்டு வாழிடப் பரப்பை மட்டுப்படுத்துகிறது. அதேவேளை, செறிநிலை வேளாண்மையைப் போல கால்நடைகளின் தொகை குறைதலும் தீங்கு விளைவிக்கும்.

செறிநிலை வேளண்மையை விட, விரிநிலை வேளாண்மை ஓரலகு பால் ஆக்கத்துக்குக் கூடுதலான மீத்தேனையும் நகைப்பு வளிமத்தையும் வெளியிடுகிறது.[3]

ஓர் ஆய்வு 2007 ஆம் ஆண்டின் ஒரு பில்லியன் கிகி பால் உற்பத்தி உருவாக்கிய கரிமப் பதிவு, 1944 இன் அதே அளவு பால் உற்பத்தியின் கரிமப் பதிவைப் போல 37% அளவாக மட்டுமே உள்ளதென மதிப்பிட்டுள்ளது.[4] அண்மை ஆய்வொன்று விரிநிலைக் கால்நடை வளர்ப்பு செறிநிலைக் கால்நடை வளர்ப்பை விட குறைவான விளைவையே சுற்றுச்சூழலின்பல் செலுத்துகின்றன எனக் கூறுகிறது.[5]

Remove ads

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads