செறிநிலை வேளாண்மை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செறிநிலை வேளாண்மை (Intensive agriculture), அல்லது செறிநிலைப் பண்ணைமுறை (intensive farming) என்பது அலகு வேளாண் நிலத்துக்கு உயர் உள்ளீடும் அதனால் உயர் விளைச்சலும் அமையும் பயிரீடும் காலநடை வளர்ப்பும் நிகழும் வேளாண் அமைப்பாகும்மிதில் குறைந்த பதரும் உயர் உள்ளிடுகளும் அதாவது,உயர் முதலீடும் உயர் உழைப்பும் அலகு நிலத்தில் உயர்விளைச்சலும் அமையும்.[1]
பெரும்பாலான வணிகமுறை வேளாண்மையும் ஏதோவொரு வகையில் செறிநிலை வேளாண்மையே. இது தொழிலகமுறை நுட்பங்களைப் பின்பற்றுகின்றது. எனவே இது தொழிலகமுறை வேளாண்மை எனப்படுகிறது. இது விளைச்சலைப் பெருக்கும் புத்தாக்கங்களை அறிமுகப்படுத்துகிறது. இது ஓராண்டில் பலவகைப் பயிர்களை விளைவித்தல், பயிரிடாத இடைவெளியைக் குறைத்தல், பயிரிடுவகைகளை மேம்படுத்தல்யஆகிய நுட்பங்களைப் பயன்கொள்கிறது. கூடுதலான உரங்களையும் பயிர்வளர்ச்சிக் கட்டுபடுத்திகளையும் தீங்குயிர்கொல்லிகளையும் எந்திர மயமாக்கத்தையும் பயிர்வளர்ச்சி சார்ந்த வானிலை, மண், நீர், களைகள், தீங்குயிர்கள் ஆகியன பற்ரி விரிவாக ஆய்வு செய்கிறது . புதிய புதிய பண்ணை எந்திரங்களையும் பயிரிடுமுறைகளையும், மரபன் பொறியியலையும் பொருளியல் வளர்ச்சி சார்ந்த நுட்பங்களையும், போக்குவரத்து மேலாண்மையையும் தரவு மேலாண்மையையும் பயன்படுத்துகிறது. வளர்ந்த நாடுகளில் செறிநிலை வேளாண்மை பரவலாக வழக்கில் உள்ளது. உலக முழுவதும் இவ்வேளாண்மை பரவலடைந்து வருகிறது. பேரங்காடிகளில் விற்கும் பெரும்பாலான இறைச்சி, பற்பொருட்கள், முட்டைகள், பழவகைகள், காய்கறிகள் ஆகியவை செறிநிலை வேளாண்மையில் பெற்ற விளைபொருட்களே.
உயர்நிலை உள்ளிடுகளும் குறைவான விளைதிறமும் அமைந்தாலும் சில பண்ணைகள் பேண்தகு வேளாண்மையைப் பின்பற்றுகின்றன.[2]
வரம்புள்ள நிலப்பரப்பில் நிகழும் செறிநிலை வேளண்மைக்கு ஏராளமான கால்நடைகள் வேண்டியுள்ளன. எனவே அவை சுழற்சிமுறையில் மேயவிடப்படுகின்றன.[3][4] அல்லது மேகுலகைப் போல அவற்றுக்கு செறிநிலை உணவு வழங்கப்படுகிறது. இதனால், விரிநிலி வேளாண்மையை விட ஓர் ஏக்கருக்கு கூ டுதல் உணவும் நாரிழையும் கிடைக்கிறது; எனவே, இவ்வேளாண்மையில் செறிநிலை உணவு தரல் அல்லது புதிய புதிய மேய்ப்பிடங்களில் சுழற்சிமுறையில் மேய விடுதல் இன்றியமையாததாகிறது.[3][4]
Remove ads
வரலாறு

பழங்காலத்தில் இருந்தே கொரியாவில் நெற்பயிர் விளைச்சல் நடைமுறையில் இருந்துவந்துள்ளது. தயோக்கியோன்னி தொல்லியல் களக் குழியொன்றின் வீட்டில் இருந்து கரிமமுற்ர அரிசிமணிகள் கிடைது கதிர்வீச்சுக் கரிம ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. நெற்பயிர் விளைச்சலின் காலம் கொரியத் தீவகத்தின் இடைநிலை யியூல்முன் மட்பாண்டக் காலத்தின் தொடக்க காலமாக அதாவது கிமு 3500 இல் இருந்து கிமு 2000 வரையிலான காலமாகக் கண்டறியப்பட்டுள்ளது.[5] இங்கு அமைந்த நெற்பயிரீடு நஞ்சைப் புலத்தில் அல்லாமல் புஞ்சைப் புலத்தில் நிகழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
16 ஆம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டு இடைவரை நிகழ்ந்த பிரித்தானிய வேளாண்புரட்சி வேளாண் விளைதிறனைப் பன்மடங்கு பெருக்கி வேளாண் வெளியீட்டைக் கூட்டியது. இது மக்கள்தொகையைப் பெருக்கி உபரி மக்களைத் தொழில்புரட்சியில் ஈடுபடுத்த வழிவகுத்தது. வரலாற்று ஆய்வாளர்கள் எந்திரமய வேளாண்மை, நன்குமுறைப் பயிர்ச்சுழற்சி, தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம் அக்கால முதன்மையான புத்தாக்கங்களாகக் கூறுகின்றனர்.[6]
Remove ads
நுட்பங்களும் தொழில்நுட்பங்களும்
கால்நடை
மேய்ச்சல்நிலச் செறிவாக்கம்

மேய்ச்சல் நிலச் செறிவாக்கம் புல், மண் வளத்தை மேம்பட்த்திக் கால்நடைகளின் உணவாக்க வளமையைக் கூடுகின்றன. இது நிலத்தைத் தரமிறக்கத்தில் இருந்து மீட்கிறது. நிலத் தரமிறக்கம் மிகை மேய்ச்சலாலும் மிகக் குறைந்த ஊட்ட மேலாண்மையாலும் மண்வளம் பேனாமையாலும் ஏற்படுகிறது. இதனால், மேய்ச்சல் வளம் குறைந்து விலங்கு வாழ்தரமும் குறைகிறது .[7] இந்தத் தரமிறக்கம் வளமற்ற மண்ணையும் குறைந்தநீர்தேக்குந் திறனையும் உயர்வான அரிப்பு வீதத்தையும், கெட்டிப்பையும் மண் அமிலமாக்க்கத்தையும் வழங்குகிறது.[8] தரமிலாத் மேய்ச்சல் நிலங்கள் செறிநிலை மேய்ச்சல் நிலங்களைவிட கணிசமாக குறைந்த அளவிலேயே வேளாண் விளச்சலைத் தருவதோடு யர்கரிமப் பதிவையும் தருகின்றன.[9][10][11][12][13]
Remove ads
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads