விலங்கின நடத்தையியல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நடத்தையியல் (Ethology) அல்லது விலங்கின நடத்தையியல் என்பது விலங்கு இனங்களின் நடத்தை பற்றி அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்யும் ஒரு துறை ஆகும். இது, விலங்கியலின் ஒரு துணைத்துறை.[1][2][3]
விலங்கியல் |
விலங்கியலின் கிளைகள் |
மானிடவியல் · |
குறிப்பிடத்தக்க விலங்கியலாளர் |
ஜார்ஜஸ் கவியர் · சார்லசு டார்வின் |
வரலாறு |
டார்வினுக்கு முன் |
வரலாற்றுக் காலம் முழுவதிலும் பல இயற்கையியலாளர்கள் விலங்கின நடத்தைகள் பற்றி ஆய்வு செய்திருந்தாலும், 1930 ஆம் ஆண்டில், டச்சு உயிரியலாளரான நிக்கோ டின்பெர்ஜென் (Nikolaas Tinbergen), ஆசுத்திரிய உயிரியலாளர் கான்ராட் லாரென்சு (Konrad Lorenz) ஆகியோரது ஆய்வுகளுக்குப் பின்னரே தற்கால நடத்தையியல் துறை தொடங்கியதாகக் கருதப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் 1973 ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நடத்தையியல் கள ஆய்வுகளும், சோதனைக் கூட ஆய்வுகளும் இணைந்த ஒரு ஆய்வுத்துறை ஆகும். இது, நரம்பணுவியல், சூழலியல், கூர்ப்பு ஆகிய துறைகளுடன் வலுவான தொடர்புகளைக் கொண்டது. நடத்தையியலாளர்கள் பொதுவாக நடத்தை சார்ந்த வழிமுறைகள் தொடர்பிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். இவ்விடயத்தில் அவர்கள், ஒரு குறிப்பிட்ட விலங்கினக் குழுவை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், ஒன்றுக்கொன்று தொடர்பற்ற பல விலங்கினங்களின் ஒரு குறிப்பிட்ட வகையான நடத்தைகளை மட்டும் (எகா: தன்முனைப்பு நடத்தை) கவனத்தில் கொள்கின்றனர்.
Remove ads
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads