விலங்குகளிடம் உணர்வு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விலங்குகளிடம் உணர்ச்சி (Emotion in animals) என்பது மனிதன் அற்ற வேறு விலங்குகளிடம் காணப்படும் அல்லது விலங்குகளினால் உணரப்படும் உள உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் குறிப்பதாகும். அவ்வுணர்ச்சிகள் உளவியல் முறையில் வெளிப்பாடுகளாகவும், உயிரியல் எதிர்வினைகளாகவும் உணர்ச்சிநிலைகளாகவும் வகைப்படுத்தப்படுகின்றன.

உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் யானைகள்
விலங்குகளில் காணப்படும் உணர்வுகளின் இயற்கைத் தன்மையைப்பற்றியும் இருப்பைப்பற்றியும் முதன்முதல் எழுதிய விஞ்ஞானி சார்ள்ஸ் டார்வின் ஆவார்.[1]
விலங்குகளின் துக்கம் என்பது நமக்கு பிடித்தமான ஒன்றினை இழக்கும் போது ஏற்படும் துன்பமான உணர்ச்சிநிலை ஆகும். இந்த உணர்ச்சி மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளிலும் காணப்படுகிறது.உணர்ச்சிகளின் படிமலர்ச்சி குறித்த ஆய்வு 19 ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகும். டார்வின் மாந்த தொடர்பாடலைப் புரிந்துகொள்ல படிமலர்ச்சியையும் இயற்கைத் தேர்வையும் பயன்படுத்தினார். இவரது 1872 ஆண்டு நூலாகிய, விலங்கிலும் மாந்தனிலும் உணர்ச்சிகளின் வெளிப்பாடு விலங்கின் உணர்ச்சிகளைப் பற்றி விவரித்துள்ளது.[2] டார்வின் உஆர்ச்சி வெளிப்பாட்டை ஆய்வு செய்து, மாந்த படிமலர்ச்சி வாயிலாக புறத்தோற்றவகைகளை விலங்கில் இருந்து பெற்றது போலவே படிமலர்ச்சிவழியாக உணர்ச்சிகளையும் விலங்கு வழியாகவே பெற்ருத் தகவமைத்துக் கொண்டான் என்றார்.[3] இவர் உணர்ச்சிகளை முக வெளிப்பாடு மட்டத்தில் மட்டுமன்றி விலங்கு மாந்த நடத்தைகளி இணைநிலைகள் துலங்குவதை ஆய்ந்தார்.
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சிம்பன்சீஸின் துயரத்தை பற்றியும், விலங்கு மற்றும் மனித துயரத்திற்கும் இடையேயான தொடர்பை பற்றியுமான ஆராய்ச்சி தொடங்கியது. எனினும், விலங்குகளின் வருத்தங்களைப்பற்றிய ஆராய்ச்சிகள் அதிகம் வருவதில்லை.மார்க் பெக்காஃப் என்ற விஞ்ஞானி, ஓநாய்கள், சிம்பான்சிகள், மாக் போர்கள், யானைகள், டால்பின்கள், ஒட்டர்ஸ், வாத்துகள், கடல் சிங்கங்கள் மற்றும் இன்னும் பல விலங்குகளில் துன்பம், வருத்தம் போன்ற உணர்ச்சிகளை ஆராய்ச்சி செய்தார்.
Remove ads
விலங்கு உணர்ச்சி குறித்த ஆராய்ச்சி

1879 ஆம் ஆண்டில் ஆர்தர் இ. பிரவுன், ஒரு பெண் சிம்பன்ஸீயின்தைறப்பிற்குப் பிறகு ஒரு ஆண் சிம்பன்ஸி எப்படி நடந்து கொண்டது என்பதை ஆராய்ச்சி செய்தார். அந்த ஆண் சிம்பன்சியின் துயரத்தை அவர் கண்டார். (பிரவுன், 1879, பக்கம் 174). பல நாட்கள் நடந்த ஆராய்ச்சியில் அந்த ஆண் சிம்பன்சி, பெண் சிம்பன்சி இறந்தபின் மிகுந்த மனச்சோர்வடைந்து காணப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகுதான் சிம்பன்சி நன்றாகத் தேறியுள்ளது.
வில்லியம் ஈ ரிட்டர் (1925) விலங்கு மற்றும் மனித உணர்ச்சியை இணைப்பதை பற்றி ஆராய்ச்சி செய்தார். "மகிழ்ச்சி, துக்கம், அச்சம், கோபம், பொறாமை, அன்பு போன்றவற்றின் உணர்ச்சிகரமான நிலைகள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நடத்தையாக உடல்வெளிப்பாடுகளுடன் தொடர்புடையவை" (ரிட்டர், 1925, பக்கம் 137). ரிட்டர் புதிய தத்துவத்தை கோட்பாட்டிற்கு முன்மொழிகிறார், மேலே குறிப்பிட்டுள்ள பட்டியலில் எந்த உணர்ச்சியும் மனிதர்களுக்கு மட்டுமே தனிச்சிறப்பானதன்று, பெரும்பாலானவை விலங்கு உலகிற்கும் பொதுவானவை என்று குறிப்பிடுகின்றார். மனித உணர்ச்சி மற்றும் விலங்கு உணர்ச்சி இடையே இணைப்பு மிகவும் வலுவான ஏனெனில், மனிதர்கள் விலங்கு இராச்சியத்தில் இருந்து இறங்கியது என்று அவர் வாதிடுகிறார்.
Remove ads
மார்க் பீகாப்பின் அண்மைய ஆராய்ச்சியும் விலங்கு துக்கமும்
மார்க் பெக்காஃப் கொலராடோ-போல்டர் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல், படிமலர்ச்சி உயிரியல் பேராசிரியர் ஆவார். விலங்குகளைப் படிப்பதற்கும், அவற்றின் உணர்ச்சிகளைப் படிப்பதற்கும் உறவுபடுத்தி விலங்குகள் மிகவும் வருந்துகிறதா என்பதை கண்டுபிடித்துள்ளார்.
துயரமளிக்கும் விலங்குகள் போன்ற எடுத்துகாட்டுகள்
கடற்கரை சிங்கம் தாய்மார்கள் தங்கள் குழந்தையைக் கொல்வதால் அவை வருந்துவதை கண்டறிந்தார். (பீகாஃப், 2000) யானைகள் தங்கள் குட்டிகளுக்கு ஆபத்து ஏற்படும்போது வருந்துவதை கண்டறிந்துள்ளனர். வாத்துக்கள் உடனிருந்த வாத்து இறந்ததும் மிகவும் சோர்ந்து காணப்படுவதை கண்டுள்ளனர்.
விலங்கு ஆராய்ச்சிக்கான மற்ற ஆய்வு

விலங்கு துக்கத்தை பற்றிய அண்மைய ஆராய்ச்சியின் முகம் பெக்கோபா என்றாலும், மற்ற விஞ்ஞானிகள் இதை மேலும் பார்க்கத் தொடங்கி உள்ளனர். சில ஆய்வுகள் விலங்குகளில் மனச்சோர்வைக் கண்டிருக்கின்றன. பால் விர்னர் (1984) பதினெட்டு விலங்கு வகைகளில் மன அழுத்தம் இருப்பதாக கண்டுபிடித்துள்ளார்.
ஆராய்ச்சித் தாக்கங்கள்
விலங்குகள் துயரங்கள் சந்தேகத்திற்குரியதாக தோன்றினாலும், அது ஏராளமாக உள்ளது என்பதை இந்த ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக்கின்றன. சிம்பன்சிகளிடம் இருந்து கடல் சிங்கங்கள் வரை, மனிதர்கள் போலவே விலங்குகள் துக்கப்படுகின்றன. பெக்கோப், பாழ்சிங் இங்யூயென், மற்றும் பலஈதுபோன்ற ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு நாளும் படித்து வருகிறார்கள், எப்படி,ஏன் விலங்குகள் துக்கப்படுகின்றன ? என்பதை நன்கு புரிந்துகொள்ள இந்த ஆராய்ச்சிகள் உதவுகின்றன.மனிதர்கள் விலங்குகளுடன் நல்ல உறவுகளை வைத்திருக்க முடியும். எடுத்துக்காட்டாக, விலங்குக்காட்சிசாலையில் தாய் சிம்பன்சி துயரப்படுகையில், கண்காணிப்பாளர் அதன் குட்டிகளை அருகில் விடுவதன் மூலம் தாயின் துன்பத்தை குறைக்கலாம். விலங்குகளுக்கும் துன்பம் என்ற உணர்ச்சி உண்டு என்பதை இந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. விலங்குகளை துன்புறுத்தாமல் இருப்பது மனிதனின் கடமை ஆகிறது.விலங்குகளின் துன்பத்தை குறைத்து அவை நலமான வெற்றிகரமான வாழ்க்கை வாழ உதவலாம்.[4]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads