இந்திய அணில்

பாலூட்டி இனம் From Wikipedia, the free encyclopedia

இந்திய அணில்
Remove ads

இந்திய அணில் (Indian palm squirrel, "Funambulus palmarum") என்பது ஒரு வகை அணில் ஆகும். இது மூன்று கோடுகளுள்ள அணில் என அழைக்கப்படுகின்றது. இது செல்லப்பிராணியாகவும் வளர்க்கப்படுகின்றது.[3] இது இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் காணப்படுகின்றது. 19ம் நூற்றாண்டு பிற்பகுதியில் மேற்கு ஆவுத்திரேலியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு, இயற்கையாக மற்ற விலங்குகளால் குறைவாக வேட்டையாடபப்டுவதால் சிறிய தீங்குயிராக மாறி, அழிக்கப்பட இலக்கு வைக்கப்பட்டது.[4] இதன் நெருங்கிய ஐந்து கோடுகளுள்ள அணில் வட இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.

Thumb
இந்தியப் பனை அணில், பெங்களூரு, இந்தியா
விரைவான உண்மைகள் இந்திய அணில், காப்பு நிலை ...
Remove ads

வாழ்க்கை சுழற்சி

இந்திய பனை அணில் பல்வேறு இனப்பெருக்க நடத்தைகளை வெளிப்படுத்துகிறது. சில சுழற்சி காலச் செயல்பாடுகளைக் காட்டுகின்றன. மற்றவை தொடர்ச்சியான இனப்பெருக்கச் செயல்பாட்டைக் காட்டுகின்றன.[5] கர்ப்ப காலம் 34 நாட்கள் ஆகும். இலையுதிர் காலத்தில் புற்களில் கட்டப்படும் கூடுகளில் இனப்பெருக்கம் நடைபெறுகிறது. இரண்டு அல்லது மூன்று குட்டிகளை பொதுவாக ஈணுகின்றன. குட்டிகள் 10 வாரங்களுக்குப் பாலூட்டப்பட்டு வளர்க்கப்படும் குட்டிகள் 9 மாதங்களில் பாலின முதிர்ச்சியடைகின்றன. முதிர்ச்சியடைந்த அணிலின் எடை 100 கிராம். இவற்றின் ஆயுட்காலம் பொதுவாக 5.5 ஆண்டுகள் வரை இருக்கலாம்.[6]

Thumb
மூன்று வரி அணிலின் ஓரிணை குட்டிகள்
Remove ads

துணை இனங்கள்

பொதுவாக நான்கு துணையினங்கள் புவியியல் பரவலின் படி விவரிக்கப்படுகின்றன. ஆனால் இன்னும் பல துணையினங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை வகைப்பாட்டியல் ரீதியாக செல்லுபடியாகவில்லை.

  • பனம்புலசு பால்மரம் பெல்லாரிகசு (வரோட்டன், 1916)
  • பனம்புலசு பால்மரம் பால்மரம் (லின்னேயசு, 1766)
  • பனம்புலசு பால்மரம் பிராடி (பிளைத், 1849)
  • பனம்புலசு பால்மரம் ராபர்ட்சோனி (வரோட்டன், 1916)

தவறான துணை இனங்கள்

  • பனம்புலசு பால்மரம் பெங்கலென்சிசு (வரோட்டன், 1916)
  • பனம்புலசு பால்மரம் கொமோரினசு (வரோட்டன், 1905)
  • பனம்புலசு பால்மரம் கோசி (வரோட்டன் மற்றும் டேவிட்சன், 1919)
  • பனம்புலசு பால்மரம் கெளார்ட்டி (லேயார்ட், 1851)
  • பனம்புலசு பால்மரம் மாடுகமென்சிசு (லிண்ட்சே, 1926)
  • பனம்புலசு பால்மரம் ஒலிம்பியசு (தாமசு மற்றும் வரோட்டன், 1915)
  • பனம்புலசு பால்மரம் பென்சிலாடசு (லீச், 1814)
  • பனம்புலசு பால்மரம் ஃபேவோனிகசு (தாமசு மற்றும் வரோட்டன், 1915)
Remove ads

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads