விலாசம் (திரைப்படம்)
2014 திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
விலாசம் (Vilaasam) என்பது 2014ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி நாடகத் திரைப்படம் ஆகும். பா. ராஜகனேசன் எழுதி இயக்கிய இப்படத்தில் பவன், சனம் ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். படமானது 14 நவம்பர் 2014 அன்று வெளியிடப்பட்டது. பின்னர் இது தெலுங்கில் அதே பெயரில் மொழிமாற்றம் செய்யபட்டு வெளியிடப்பட்டது.[1]
Remove ads
நடிகர்கள்
தயாரிப்பு
இப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜ கணேசன் இயக்கியுள்ளார். படத்தில் பவன், சனம் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தேர்வு செய்யப்பட்டனர்.[2][3]
இசை
படத்திற்கு ரவி ராகவ் இசையமைத்தார்.
வெளியீடும் வரவேற்பும்
இப்படம் 14 நவம்பர் 2014 அன்று தமிழகத்தில் ஆறு படங்களின் ஊடாக வெளியிடப்பட்டது.[4] தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இப்படத்தைப் பற்றி எழுதுகையில் "அறிமுக படைப்பாளியின் பாராட்டத்தக்க முயற்சி இது" என்று குறிப்பிட்டது, இதன் உள்ளடக்கத்தைப் பற்றிய "ஒரு பிடிமானமுள்ள கதை" என்று குறிப்பிட்டது.[5]
மலை மலரின் விமர்சகர் ஒருவர் முன்னணி நடிகர்களின் நடிப்பைப் பாராட்டி படத்திற்கு நேர்மறையான விமர்சனம் அளித்தார்.[6] அதேபோல், தினமலர் மற்றும் ஐஃப்லிக்ஸ்.காம் ஆகியவற்றின் விமர்சகர்களும் படத்திற்கு நேர்மறையான விமர்சனங்களை வழங்கினர்.[7][8]
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads