வில்லிவாக்கம் தொடருந்து நிலையம்
இந்தியா, தமிழகத்திலுள்ள தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வில்லிவாக்கம் தொடருந்து நிலையம் (Villivakkam railway station) சென்னை புறநகர் இருப்புவழி வலையமைப்பில் சென்னை மத்திய தொடருந்து-அரக்கோணம் தொடருந்து நிலையப் பிரிவில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். சென்னை மத்திய தொடர்வண்டி நிலையத்திலிருந்து 9 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் இந்த நிலையம், வில்லிவாக்கம், கொளத்தூர், பாடி ஆகிய ஊர்களுக்கு அருகில் உள்ளது. வில்லிவாக்கம் தொடருந்து நிலையம் கடல் மட்டத்திலிருந்து 10.25 மீ உயரத்தில் உள்ளது.
Remove ads
வரலாறு


1979 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் தேதி சென்னை மத்திய தொடருந்து நிலையம்-திருவள்ளூர் தொடருந்து நிலையப் பிரிவின் மின்சாரமயப்படுத்தலுடன் இந்த நிலையத்தின் முதல் தடம் மின்சாரமயமாக்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி வில்லிவாக்கம் தொடருந்து நிலையம்-ஆவடி தொடருந்து நிலையப் பிரிவின் மின்சாரமயப்படுத்தலுடன் இந்த நிலையத்தின் எஞ்சிய தடங்கள் மின்சாரமயமாக்கப்பட்டன.[1]
Remove ads
வசதிகள்
வில்லிவாக்கம் தொடருந்து நிலையத்தில் பாதசாரிகளுக்கான நடை மேம்பாலம், சமதள நிலை கடப்பு மற்றும் வாகன சுரங்கப்பாதை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாகன சுரங்கப்பாதையின் கட்டுமானம் 4 டிசம்பர் 2007 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது.[3] முந்தைய சமதள நிலை கடப்பு இரண்டிற்குப் பதிலாக[4]2012 ஆம் ஆண்டு சூன் மாதம் 19 அன்று போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. இவ்வசதி நிலையத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
ஒவ்வொரு நாளும் 900 அனுமதிச் சீட்டுகள் இங்கு வழங்கப்படுகின்றன. இதில் 400 பயணிகள் வடக்குப் பகுதியிலிருந்து வருகின்றனர். 2002 ஆம் ஆண்டில், வடக்குப் பகுதியில் ஒரு பயணச்சீட்டு வழங்கும் முனையம் திறக்கப்பட்டது. இருப்பினும், குறைவான பயன்படுத்தல் காரணமாக 2005 ஆம் ஆண்டு மூடப்பட்டது.[5]
Remove ads
மக்கள் தொகை
அருகிலுள்ள கொளத்தூர் பகுதியில் 54 காலனிகளில் 500,000 மக்கள் வசிக்கின்றனர். சென்னை புறநகர் இரயில்களின் சேவையை தினசரி 25,000 பேர் பயன்படுத்துகின்றனர். 2013 ஆம் ஆண்டின் போதே, இந்த நிலையம் ஒரு நாளைக்கு 32,000 பயணிகளை கையாண்டது.[2]
மேலும் பார்க்க
- சென்னை புறநகர் ரயில்வே
- ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலை
- மண்டல இரயில்வே அருங்காட்சியகம்
- சென்னை புகையிரத நிலையம்
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
