விளாங்குறிச்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விளாங்குறிச்சி (ஆங்கிலம்:Vilankurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரியம் ஆகும்.
Remove ads
வரலாறு
கோயம்புத்தூர் மாவட்டத்தின் பழமையான கிராமங்களில் ஒன்றே விளாங்குறிச்சி ஆகும். இங்குள்ள ஆலயம் ஒன்றில் உள்ள விளாங்குறிச்சி நீர்ப்பாசனக் கல்வெட்டு சிறப்பு வாய்ந்தது. அருகிலுள்ள காளப்பட்டி பகுதியில் பண்டைய வரலாற்று ஆதாரங்கள் சில கிடைக்கப் பெற்றுள்ளன.
புவியியல்
விளாங்குறிச்சி சற்றே தாழ்வான நிலப்பரப்பில் அமைந்துள்ளது. கரிசல் மண் பகுதிகளை அதிகமாகக் கொண்டுள்ள இவ்வூரில் ஒரு காலத்தில் பருத்தி மற்றும் சோளம் அதிகளவில் பயிரிடப்பட்டு வந்தன. நகர மயமாதலின் விளைவுகளால் விளாங்குறிச்சி பகுதிகள் தற்போது புதிய குடியிருப்புகள் பலவற்றை கொண்டுள்ளன. நீர்ப்பாசனக் குளங்கள் பலவும் தற்போது அழிந்து விட்டன.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9122 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். விளாங்குறிச்சி மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. விளாங்குறிச்சி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
வங்கிகள்
கனரா வங்கி, இந்தியன் வங்கி, கரூர் வைசியா வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகியன சேரன் மாநகர் பகுதியில் இயங்கி வருகின்றன.
தபால் நிலையங்கள்
விளாங்குறிச்சி(641 035) மற்றும் சேரன் மாநகரில் (641 051)தபால் நிலையங்கள் செயல் பட்டு வருகின்றன.
கல்வி நிலையங்கள்
அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு நடுநிலைப் பள்ளி, ஆர்.ஜே.பதின்ம பள்ளி ஆகியன விளாங்குறிச்சியில் அமைந்துள்ளன.
மருத்துவமனைகள்
விளாங்குறிச்சி மற்றும் சேரன் மாநகரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. சேரன் மாநகரில் ஆண்டாள் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது.
போக்குவரத்து
விளாங்குறிச்சியிலிருந்து நகரப் பேருந்துகள் பல இயங்கி வருகின்றன.
முக்கியமான நகரப்பேருந்து வழித்தடங்கள் பின்வருமாறு:
S 19 விளாங்குறிச்சி - வெள்ளலூர்
24 காளப்பட்டி - உக்கடம்
57 A கோட்டை பாளையம் - உக்கடம்/குறிச்சி
100 காந்திபுரம் (கணபதி வழி)
100 C காந்திபுரம் (பீளமேடு வழி)
விளாங்குறிச்சிக்கு அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் பீளமேடு ஆகும். இந்நிலையம் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு கோயம்புத்தூர், ஈரோடு, பாலக்காடு மற்றும் திருச்சிராப்பள்ளி செல்லும் பயணியர் தொடர் வண்டிகள் நின்று செல்கின்றன. மங்களூர் மற்றும் சென்னை செல்லும் விரைவு ரயில்களும் இங்கு நின்று செல்கின்றன.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads