விளைநிலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விளைநிலம் என்பது பயிர் விளைவிக்கக்கூடிய நிலமாகும்.[1] 2008 நிலவரப்படி, உலகின் மொத்த விளைநிலம் 13,805,153 km² ஆகும்.[2]

நீர்ப்பாசனம், காடழிப்பு, பாலைவனமாதல், பெருநகரங்களின் விரிவாக்கம் போன்ற மாந்தச் செயற்பாடுகள், தட்பவெப்ப மாறுபாடுகள் காரணாமாக, வட்டார அளவிலும் சரி, உலக அளவிலும் சரி விளைநிலங்களின் அளவு மாறிக் கொண்டே இருக்கிறது. ஆய்வாளர்கள் இந்த மாற்றங்களின் காரணமாக உணவு உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்களை ஆய்ந்து வருகிறார்கள்.[3][4]
நிலவரலாற்றுக் காலத்தில் ஆறுகளும் கடல்களும் விட்டுச் சென்ற படுகைகள் உள்ள நிலங்களே நல்ல விளைச்சல் தரக்கூடிய நிலங்களாக உள்ளன. எனினும் நவீன உலகில், வெள்ளக்கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் முன்பு போல் ஆற்று வெள்ளம் பாய்ந்து வளமான மண்ணை விட்டுச் செல்வதில்லை.
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads