விளையனூர் இராமச்சந்திரன்
இந்திய-அமெரிக்க நரம்பியல் அறிவியல் அறிஞர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வி. சு. இராமச்சந்திரன் என்று சுருக்கமாக அழைக்கப்படும் விளையனூர் சுப்ரமணியன் இராமச்சந்திரன் (Vilayanur S. Ramachandran; பிறப்பு: 1951) ஒரு நரம்பியல் மருத்துவ நிபுணர் ஆவார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உளவியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
Remove ads
இளமையும், கல்வியும்
இராமச்சந்திரன் 1951 ஆம் ஆண்டு இந்தியாவின் தமிழ்நாட்டில் பிறந்தார்.[1][2] இவரது தாயார் கணிதத்தில் பட்டம் பெற்றவர். இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவரான அல்லாடி கிருட்டிணசாமி இவருடைய தாத்தா ஆவார். சென்னையிலும் பாங்காக்கிலும் இவர் பள்ளிக்கல்வியைப் பயின்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இசுடான்லி மருத்துவக்கல்லூரியில் மருத்துவத்தில் பட்டம் பெற்றார். கேம்பிரிச்சில் திரினிட்டிக் கல்லூரியில் ஆய்வுப் பட்டம் பெற்றார். எப்.ஆர்.சி.பி லண்டன் பட்டமும் பெற்றார்.
Remove ads
ஆய்வும் அருஞ்செயலும்
இராமச்சந்திரன் மூளையின் வியக்கத்தக்க செயல்பாடுகளையும் நடத்தை நரம்பியல், உளவியல் சார்ந்த தெரியியல் ஆகியன பற்றியும் ஆய்வு செய்துள்ளார். பார்வை உணர்வு, ஆட்டிசம், பொய்த்தோற்ற உறுப்புகள் ஆகியன பற்றிப் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். பல் வேறு ஊடகங்களிலும் அவருடைய சாதனைகள் விளக்கப்பட்டுள்ளன.
இராமச்சந்திரன் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஆத்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்குள்ள கல்வி நிலையங்களிலும் ஆய்வு நிறுவனங்களிலும் தம் ஆய்வுகள் தொடர்பான சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்.
Remove ads
நூல்கள்
- மூளையின் மாயாஜாலங்கள், 1998
- உருவாகும் உள்ளம், 2003
பாராட்டுகள்,விருதுகள்
- டைம் இதழ் நூறு செல்வாக்குள்ள அறிஞர்களில் வி. சு. இராமச்சந்திரனை ஒருவராகத் தேர்ந்தெடுத்தது.
- ராயல் நெதர்லாண்ட்ஸ் அகாதமி இவருக்கு ஏரியன்ஸ் கேப்பர்ஸ் பதக்கம் வழங்கியது.
- பீ பீ சீ சார்பில் ரீத் பேருரை விருது வழங்கப்பட்டது.
- 2005 ஆம் ஆண்டில் என்றி டேல் பதக்கம் இவருக்கு அளிக்கப்பட்டது.
- 2007ஆம் ஆண்டில் இந்திய அரசு பத்மபூசண் விருது வழங்கி இவரை பெருமைப்படுத்தியது.[3]
- 2010 இல் தில்லியில் சவகர்லால் நேரு நினைவுச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
- ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், அமெரிக்கன் நரம்பியல் துறைக் கழகம் ஆகிய கல்வி நிறுவனங்கள் இவருக்கு விருதுகள் அளித்துக் கௌரவித்தன.
- ஆக்சுபோர்டு அறிஞர் ரிச்சர்ட் டாக்கின்ஸ் இவரை நரம்பியல் துறையின் மார்க்கோ போலோ என்று பாராட்டினார்.
Remove ads
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads