விழிஞ்ஞம் குகைக் கோயில்

கேரளத்தின், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள குகைக் கோயில் From Wikipedia, the free encyclopedia

விழிஞ்ஞம் குகைக் கோயில்
Remove ads

விழிஞ்ஞம் குகைக் கோயில் (Vizhinjam Cave Temple) என்பது இந்தியாவின் தென் கேரளத்தில், திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள விழிஞ்ஞத்தில் கிபி. 8 ஆம் நூற்றாண்டு கால இந்து கோவில் ஆகும். [1]

விரைவான உண்மைகள் விழிஞ்ஞம் குகைக் கோயில், அமைவிடம் ...

குகையில் ஒரே கல்லலில் செதுக்கபட்ட வீணா தட்சிணாமூர்த்தியின் ஒரு சிற்பத்தை உள்ளடக்கிய சன்னதி உள்ளது. குகையின் வெளிப்புறச் சுவரில் இடதுபுறத்தில் சிவனின் திரிபுராந்தகர் சிற்பமும், வலதுபுறத்தில் பார்வதியுடன் நடராசர் சிற்பமும் உள்ளது. மேலும் முடிக்கப்படாத பல்லவ துவாரபாலகர்கள் சிற்பமும் உள்ளன.[1]

இந்தக் கோயிலானது திருவனந்தபுரம் நகர மையத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 8 ஆம் நூற்றாண்டில் கேரளத்தின் தெற்குப் பகுதிகளை ஆண்ட ஆய் மன்னர்களின் தலைநகராக விழிஞ்ஞம் இருந்தது.

Remove ads

பட தொகுப்பு

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads