விவேகானந்தர் பாறை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விவேகானந்தர் பாறை என்பது கன்னியாகுமரிக் கடலில் அமைந்துள்ள ஒரு பாறையாகும். சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரிக்கு வந்திருந்த போது கடலுக்குள் அமைந்திருக்கும் இந்தப் பாறைக்கு நீந்திச் சென்று, மூன்று நாட்கள் தியானம் செய்திருக்கின்றார். எனவே அவரது நினைவாக இந்தப் பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டு 1972 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அதன் பிறகு இந்தப் பாறைக்கு விவேகானந்தர் பாறை என்ற பெயர் ஏற்பட்டது. இப்பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபமும் அம்மன் பாதக் கோயில் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளன. இதனருகிலுள்ள மற்றொரு பாறையில் உலகின் மிக உயரமான திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |



Remove ads
ஸ்ரீ பாதப் பாறை
கன்னியாகுமரியான ஸ்ரீ பகவதியம்மன், சிவபெருமானை மணப்பதற்காக இந்தப் பாறையில் நின்று தவம் செய்ததாகவும் அதனால் இந்தப் பாறையில் அவரது பாதத்தின் தடம் பதிந்துள்ளது என்றும் இந்து சமயத்தவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்தத் தொன்ம நம்பிக்கையில் இந்தப் பாறைக்கு முதலில் ஸ்ரீ பாதப் பாறை என்றுதான் பெயர் இருந்தது என்கின்றனர்.
அம்மன் பாதக் கோயில்
இந்து சமயத்தவர்களால் அம்மன் பாதம் என்று கருதப்படும் இடம், கண்ணாடியில் பார்வைக்குத் தெரியும்படி பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதத்தைச் சுற்றிக் கோயில் போன்ற அமைப்பில் திருபாத மண்டபம் எனும் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

விவேகானந்தர் நினைவு மண்டபம்
விவேகானந்தர் தவம் செய்த இந்தப் பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இம்மண்டபத்தினுள் விவேகானந்தர் நின்ற நிலையிலான பெரிய வெண்கலைச் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ள பாறையின் கீழ் பகுதியில் ஒரு தியான மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

கடைகள்
இந்தப் பாறையின் மேல் விவேகானந்தர் தொடர்புடைய பல மொழிகளிலான புத்தகங்கள், படங்கள் மற்றும் விவேகானந்தர் படத்துடனான பல்வேறு கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இருக்கின்றன.
படகுப் போக்குவரத்து
கன்னியாகுமரிக் கடலின் கரையிலிருந்து விவேகானந்தர் பாறைக்கு தமிழ்நாடு அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் மூலம் படகுப் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் படகுப் போக்குவரத்துக்காக சாதாரணக் கட்டணம், சிறப்புக் கட்டணம் என இரண்டு வழிகளிலான கட்டணங்கள் உள்ளன. இரு வகையான கட்டணம் என்றாலும் பயணம் அனைவருக்கும் சமமாகத்தான் உள்ளது. சிறப்புக் கட்டணம் விரைவில் பயணிக்க உதவுகிறது.
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads