விவேக் விகார்

இந்திய நாட்டின் தில்லியின் புறநகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

விவேக் விகார் (Vivek Vihar) இந்தியாவின் தேசிய தலைநகர் பகுதியிலுள்ள தில்லியின் சதாரா மாவட்டத்தின் 3 துணைப்பிரிவுகளில் ஒன்றாகும்.[1] இப்பிரிவு காசியாபாத்தின் விளிம்பிற்கு அருகில் ஒரு புறநகர்ப் பகுதியாக உள்ளது. அதே போல் உத்தரபிரதேச எல்லையிலுள்ள சவுத்ரி சரண் சிங் சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.[2][3]

விவேக் விகார் துணைக்கோட்டங்கள்

விவேக் விகார் துணைக்கோட்டம் 5 முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது:[1][4][5]

  • கர்கர்துமா
  • ஓல்டன்பூர்
  • சந்திரவாலி
  • கோண்டாலி
  • சீலம்பூர்
  • இழில்மில்

விவேக் விகார் குடியிருப்பு

விவேக் விகார் சதாராவின் மிகவும் முதன்மையான பகுதிகளில் ஒன்றாகும். மேலும் இப்பகுதி முதன்மையாக குடியிருப்பு மேம்பாடுகளைக் கொண்டுள்ளது. கட்டிடத் தளங்கள் மற்றும் தனி வீடுகள் இங்கு ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த பகுதி இயற்கையான கிடைமட்ட இயல்பும் தாழ்வான நிறுவனங்களையும் கொண்டுள்ளது. குடியிருப்புப் பகுதி முறையாக அமைக்கப்பட்டு 4 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தொகுதிகள் ஆங்கில எழுத்துகளான ஏ முதல் டி வரை அமைந்துள்ளன. கிழக்கு தில்லியின் பிற முக்கிய பகுதிகளான ஆனந்த் விகார், இயில்மில் குடியிருப்பு, சூரச்மல் விகார், விசுவாசு நகர், பிகாரி குடியிருப்பு, தெலிவாரா மற்றும் போலா நாத் நகர் ஆகியவற்றிற்கு அருகில் விவேக் நகர் உள்ளது.[2][6] உன்னதி சாலையில் அமைந்துள்ள அனுமான் பாலாச்சி கோயில் ஒரு முக்கிய மதம் சார்ந்த ஈர்ப்பாகும். இது 1998 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[7]

Remove ads

பிற பகுதிகளுடன் இணைப்பு

தில்லி மெட்ரோ: தில்சாத்து கார்டன் மெட்ரோ நிலையம் மற்றும் சிவப்பு தடத்திலுள்ள இழில்மில் மெட்ரோ நிலையம், நீலம் மற்றும் இளஞ்சிவப்பு தடங்களில் உள்ள ஆனந்த விகார் மெட்ரோ நிலையம் மற்றும் கர்கர்துமா மெட்ரோ நிலையம் ஆகியவற்றுக்கு அருகில் விவேக் விகார் பகுதி அமைந்துள்ளது.

இந்திய ரயில்வே: விவேக் விகார் இரயில் நிலையம் இப்பகுதிக்கு சேவை வழங்குகிறது. தில்லி-அவுரா பாதையின் சாகிபாபாத்து-சதாரா-தில்லி சந்திப்பு கிளையில் இந்த தொடருந்து நிலையம் உள்ளது.

பேருந்து: தில்லி போக்குவரத்துக் கழக பேருந்து வழித்தடங்கள் 313, 336, 340, 342, 358, மற்றும் 704 ஆகியவை இங்கிருந்து போக்குவரத்து வசதியை அளிக்கின்றன.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads