விஷ்வநாத் சர்மா

From Wikipedia, the free encyclopedia

விஷ்வநாத் சர்மா
Remove ads

ஜெனரல் விஷ்வநாத் சர்மா (General Vishwa Nath Sharma), PVSM, AVSM, (பிறப்பு: 4 சூன் 1930) இந்தியத் தரைப்படையின் 14வது தலைமைப் படைத்தலைவராக 1988 முதல் 1990 முடிய பணியாற்றியவர்.[2][3]

விரைவான உண்மைகள் ஜெனரல்விஸ்வநாத் சர்மா பரம் விசிட்ட சேவா பதக்கம், அதி விசிட்ட சேவா பதக்கம், பிறப்பு ...
Remove ads

குடும்பம்

இவரது தந்தை மேஜர் ஜெனரல் அமர்நாத் சர்மா பிரித்தானிய இந்தியா இராணுவத்தில் பணிபுரிந்தவர். இவரது தம்பி மறைந்த மேஜர் சோம்நாத் சர்மா 1947-48 இந்திய-பாகிஸ்தான் போரில் வீரதீரமாகப் போரிட்டு வீரமரணம் அடைந்தார். மறைவிற்குப் பின் சோம்நாத் சர்மாவிற்கு பரம் வீர் சக்கரம் விருது வழங்கப்பட்டது. இவரது மற்றொரு சகோதரர் சுரேந்திர நாத் சர்மா இந்திய இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவில் லெப்டினன்ட் ஜெனராலாக பணியாற்றியவர்.[4]

Remove ads

பெற்ற விருதுகள்

இராணுவ வாழ்க்கை

விஷ்வநாத் சர்மா தேராதூனில் உள்ள இந்திய இராணுவ அகாதமியில் 4 சூன் 1950 அன்று இராணுவ அதிகாரியாக பயிற்சி முடித்தவர். இவர் இந்தியா-பாகிஸ்தான் போர், 1965 மற்றும் 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர்களில் பங்காற்றியவர். 1 மே 1988 அன்று இந்தியத் தரைப்படையின் தலைமைப் படைத்தலைவராக பதவி உயர்வு பெற்றார்.[5] 30 சூன் 1990 அன்று இராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads