சோம்நாத் சர்மா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மேஜர் சோம்நாத் சர்மா (Somnath Sharma), PVC (31 சனவரி 1923 – 3 நவம்பர் 1947), போரில் வீர தீரச் செயல்கள் புரியும் இந்திய இராணுவத்தினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான பரம் வீர் சக்கரம் விருதை பெற்ற முதல் இந்திய இராணுவ அதிகாரி ஆவார்.[2]இவரது சகோதரர்கள் மேஜர் ஜெனரல் விஷ்வநாத் சர்மா மற்றும் லெப். ஜெனரல் சுரேந்திரநாத் சர்மா ஆவர்.


நவம்பர் 1947- இந்திய-பாகிஸ்தான் போரின் போது, சிறீநகர் விமான நிலையத்திற்குள் ஊடுருவிய பாகிஸ்தான் படையினரை எதிர்த்துப் போராடி விரட்டி அடித்தார். மேலும் பாகிஸ்தான் படைகளுக்கு எதிராக நடைபெற்ற பட்காம் சண்டையின் போது, பாகிஸ்தானின் பழங்குடியினப் படைவீரர்களை எதிர்த்துப் போராடி, காஷ்மீரில் ஊடுருவதை தடுத்து நிறுத்திய போது, சோம்நாத் சர்மா வீர மரணமடைந்தார். இவரது இறப்பிற்கு 21 சூன் 1950-இல் சோம்நாத் சர்மாவிற்கு பரம் வீர் சக்கரம் விருது வழங்கப்பட்டது.[3] [4] மேஜர் சோம்நாத் சர்மாவின் சகோதரரின் மாமியாரான சாவித்திரி கனோல்கர் என்பவரே பரம் வீர் சக்கரம் விருதினை வடிவமைத்தவர் ஆவார். [5][6]
Remove ads
பரம் வீர் விருது பெற்றவர்கள்
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads