வி. கே. திவாகரன்

இந்திய நடிகர் மற்றும் அரசியல்வாதி, அண்ணா திராவிடர் கழக நிறுவனர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

வி. கே. திவாகரன் (V. K. Divakaran) என்பவர் நடிகரும்,வி. கே. சசிகலாவின் சகோதரரும் அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியின் நிறுவன தலைவரும்,பொதுச்செயலாளரும் ஆவார்.[1][2]

விரைவான உண்மைகள் வி. கே. திவாகரன், அண்ணா திராவிடர் கழக நிறுவன தலைவர் மற்றும் பொதுச்செயலாளார் ...

சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதால் ஓ. பன்னீர்செல்வம் ஓர் அணியிலும், இபிஎஸ் மற்றும் டி. டி. வி. தினகரன் ஒரு அணியில் இருந்தனர். பின்னர் பழனிச்சாமியும், ஓ. பன்னீர் செல்வமும் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பின் இணைந்தனர். இதனால் இவரின் மருமகன் டி. டி. வி. தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார்.

இதனால் டி. டி. வி. தினகரனுக்கும், மாமா திவாகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் 'அம்மா அணி' என்ற பெயரில் திவாகரன் புதிய அமைப்பு ஒன்றைத் தொடங்கினார். பின்னர் அதை கட்சியாக மாற்றினார்.இவருக்கு ஜெய் ஆனந்த் என்ற மகன் உள்ளார்.[3][4] 1991ல் அதர்மம் என்ற பெயரில் முரளி நடித்த திரைப்படத்தில் இன்ஸ்பெக்டர் வேடம் ஏற்று நடித்தார் திவாகரன்.[5] இந்நிலையில் சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு வெளியான அறிக்கையில், “சின்னம்மா தலைமையில் அதிமுகவோடு, அண்ணா திராவிடர் கழகத்தை இணைக்கும் விழா தஞ்சாவூரில் வருகிற 2022 ஜூலை 12ஆம் தேதி காலை 11 மணியளவில் தமிழரசி திருமண மண்டபத்தில் நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads